Contact Us

Name

Email *

Message *

Wednesday 2 September 2015

Bhaja Govindaṁ - Verse 3


नारीस्तनभर नाभीदेशं 
दृष्ट्वा मागामोहावेशम् । 
एतन्मांसवसादि विकारं 
मनसि विचिन्तय वारं वारम् ॥ ३॥

स्त्री शरीर पर मोहित होकर आसक्त मत हो। अपने मन में निरंतर स्मरण करो कि ये मांस-वसा आदि के विकार के अतिरिक्त कुछ और नहीं हैं.

nārīstanabhara nābhīdeśaṁ
dṛṣṭvā māgāmohāveśam |
etanmāṁsāvasādi vikāraṁ
manasi vicintaya vāraṁ vāram || 3 ||

Do not get drowned in delusion by going wild with passions and lust by seeing a woman's navel and chest. These are nothing but a modification of flesh. Fail not to remember this again and again in your mind.

நாரிஸ்தனபர நாபிதேஶம் 
த்ருஷ்ட்வா மாகாமோஹாவேஶம்
ஏதன்மாம்சவசாதி விகாரம் 
மனசி விசிந்தய வாரம் வாரம் || 3 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

பெண்களின் மார்பழகையும் தொப்புள் அழகையும் பார்த்து மதிமயங்கி ஆவேசத்தை அடையாதே.  இவை மாமிசம், கொழுப்பு ஆகியவற்றின் வேறுபட்ட உருவங்களே என்று அடிக்கடி மனதில் எண்ணிக்கொள்.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

கொப்புளம் எழுந்ததென
கொங்கைஎழில் பொங்குவதும்
கோலஇடை கொஞ்சும் அழகும்

கொத்தும்விழி தத்தைமொழி
அத்தனையும் ஓர்பொழுதில்
கோடைமுகில் போல விலகும்!

கப்பிய சதைகளோடு
ரத்தமும் எலும்புமவை
கற்பனைகள் காட்டி மறையும்!

கால்வழியில் நீர்வழிய
கண்மணியில் சீழ்வழிய
கர்மவினை போல அழுகும்!

இப்பொழுதும் அப்பொழுதும்
எப்பொழுதும் கண்ணனவன்
இணையடிகள் பற்று தினமே!

இந்திரியம் வென்றதொரு
சுந்தர நிலாமகனின்
இனியபுகழ் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment