Beneficial Results:
நாள்பட்ட நோய் தீர Cure of chronic diseases, restoration of lost eyesight.
Activation of ajna chakra. Strengthens aura and enhances radiance.
तवाज्ञचक्रस्थं तपन-शशि कोटि-द्युतिधरं
परं शम्भु वन्दे परिमिलित-पार्श्वं परचिता ।
यमाराध्यन् भक्त्या रवि शशि शुचीना-मविषये
निरालोके உलोके निवसति हि भालोक-भुवने ॥ ३६ ॥
परं शम्भु वन्दे परिमिलित-पार्श्वं परचिता ।
यमाराध्यन् भक्त्या रवि शशि शुचीना-मविषये
निरालोके உलोके निवसति हि भालोक-भुवने ॥ ३६ ॥
ஆஜ்ஞையின் மேன்மை [இழந்த கண் பார்வை திரும்பப் பெற]
தவாஜ்ஞாசக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா |
யமாராத்யன் பக்த்யா ரவி ஸசி ஸுசீநா-மவிஷயே
நிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே || 36 ||
அம்பிகே!, உன்னுடைய ஆஜ்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன் சூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஜ்ய பதவியில் வசிப்பான்.
இங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை குறிப்பதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஜ்ஞா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.
இந்த இடத்தில் "ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள்.
தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான்.
ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 1, 55
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
- ஆஜ்ஞா சக்ராப்ஜநிலயா
- ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா
- ஷடாநநா
- சுக்லவர்ணா
tavāṅñacakrasthaṃ tapana-śaśi koṭi-dyutidharaṃ
paraṃ śambhu vande parimilita-pārśvaṃ paracitā |
yamārādhyan bhaktyā ravi śaśi śucīnā-maviṣaye
nirāloke உloke nivasati hi bhāloka-bhuvane || 36 ||
The one who worships Parameshwara,
Who has the luster of billions of moon and sun
And who lives in thine Agna chakra- the holy wheel of order,
And is surrounded by thine two forms,
On both sides,
Would forever live,
In that world where rays of sun and moon do not enter,
But which has its own luster,
And which is beyond the sight of the eye,
But is different from the world we see.
Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:36 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1050 -1055 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)
Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment