101. நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
BENEFIT OF RECITATION
Aaththaalai, engal abiraama valliyai, andam ellaam
pooththaalai, maadhulam poo niraththaalai, puvi adangak
kaaththaalai, amgaiyil paasangusamum karuppuvillum
serththaalai, mukkanniyaith, thozhuvaarkku oru theengu illaiye.
Those who worship my mother Abhirami who delivered the whole cosmos, who has the complexion of pomegranate flowers, who protects the whole universe, who exhibits the sugarcane bow, five flower missiles, the rpe, the anlius and displaying three eyes shall never have any danger in their life.
டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் - ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் ஆசி
ஒரு முறை காஞ்சி மஹாபெரியவர் முன்னால் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அபிராமி அந்தாதி பாடல்கள் முழுவதும் பாடி முடித்தவுடன் அந்த மனித தெய்வம் கூறிய வார்தைகள்:
"ஏற்கனவே சீர்காழிக்கு ஞானசம்பந்தனால பெருமை, இப்பொ இவரால இன்னும் அதிக பெருமையாயுடுத்து. பட்டர் அம்பாளுக்காக பாடினார் இவர் உலகத்துக்காக பாடி இருக்கார்" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி மிகவும் பெருமை பட்டார். இதைவிட வேறு என்ன சன்மானம் வேண்டும் உலகில்?
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலில் அபிராமி அந்தாதியினை நாமும் கேட்டு மகிழ்வோம்.

DR. SIRKAZHI GOVINDARAJAN - SRI KANCHI MAHASWAMI'S BLESSING
Once Dr. Sirkazhi Govindarajan rendered the entire Abhirami Andhadhi in the divine presence of HH Sri Kanchi Mahaswami. After he completed, Sri Mahaswami proudly said:
"Already Sirkazhi is famous because of Gnanasambandan (one of the four saivaite saints). Now it is even more famous because of Govindarajan. Abhirami bhattar sang for Goddess Abhirami, Govindarajan sings for this world"
What else will honor Sirkazhi Govindarajan than these words? Let us also enjoy Abhirami Andhadhi in his divine voice.

Reference:
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html
http://sanskritmantras.blogspot.in/2011/01/abirami-andhathi-lyrics-english.html
http://www.articlesbase.com/literature--articles/abhirami-anthathi-561445.html
No comments:
Post a Comment