Contact Us

Name

Email *

Message *

Thursday, 24 September 2015

Bhaja Govindaṁ - Verse 6


यावत्पवनो निवसति देहे 
तावत्पृच्छति कुशलं गेहे । 
गतवति वायौ देहापाये 
भार्या बिभ्यति तस्मिन्काये ॥ ६॥

जब तक शरीर में प्राण रहते हैं तब तक ही लोग कुशल पूछते हैं। शरीर से प्राण वायु के निकलते ही पत्नी भी उस शरीर से डरती है.

yāvatpavano nivasati dehe
tāvatpṛcchati kuśalaṁ gehe |
gatavati vāyau dehāpāye
bhāryā bibhyati tasminkāye || 6 ||

When one is alive, his family members enquire kindly about his welfare. But when the soul departs from the body, even his wife runs away in fear of the corpse.

யாவத்பவனோ நிவசதி தேஹே
தாவத்ப்ருச்சதி குஶலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே 
பார்யா பிப்யதி தஸ்மின்காயே || 6 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

எதுவரை மூச்சுக்காற்று உடலில் உள்ளதோ அதுவரை வீட்டில் உன்னுடைய க்ஷேமத்தை விசாரிப்பார்கள்.  அந்த மூச்சுக்காற்று போய் உடல் சாய்ந்து விட்டால் மனைவியும் அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள்.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

கட்டழகு மேனியுடன்
கட்டில்விளை யாடிவரும்
கட்டியவள் பேசும் மொழியே

காலமகள் தந்ததொரு
கோலமிகும் நாசிதனில்
காற்றுவரும் காலம் வரையே!

பட்டென விழுந்தஉடல்
பாய்விரியச் சாய்ந்தவுடன்
பத்தினியும் எந்த நிலையே

பாதிஇர வானவுடன்
பேய்வருதல் போல்நினைவள்
பதியென நினைப்ப திலையே!

ஒட்டியிருந் தோடும்உயிர்
உன்னுடைய தல்லஇனி
உடல்பேணி என்ன பயனே?

ஓர்வடிவம் சீர்வடிவம்
கார்வடிவம் நேர்வடிவம்
உத்தமனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment