Contact Us

Name

Email *

Message *

Wednesday, 16 September 2015

Bhaja Govindaṁ - Verse 5


यावद्वित्तोपार्जन सक्त- 
स्तावन्निज परिवारो रक्तः । 
पश्चाज्जीवति जर्जर देहे 
वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥ ५॥

जब तक व्यक्ति धनोपार्जन में समर्थ है, तब तक परिवार में सभी उसके प्रति स्नेह प्रदर्शित करते हैं परन्तु अशक्त हो जाने पर उसे सामान्य बातचीत में भी नहीं पूछा जाता है.

yāvadvittopārjana saktaḥ
stāvannija parivāro raktaḥ |
paścājjīvati jarjara dehe
vārtāṁ ko'pi na pṛcchati gehe || 5 ||

So long as a man is fit and able to support his family, see what affection all those around him show. But no one at home cares to even have a word with him when his body totters due to old age.

யாவத்வித்தோபார்ஜனசக்த-
ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த: |
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே 
வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே || 5 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

பொருள் ஈட்டுவதில் நாட்டம் உள்ளவனாயிருக்கும் வரைதான் உன்னை அண்டியவர்கள் பற்றுடையவர்களாயிருப்பர், அதன்பின் மூப்படைந்த உடலுடன் வாழ்ந்தால் வீட்டில் எவரும் ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார்கள்.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

மாடுமனை தேடுவதும்
வல்லநிலை கூடுவதும்
வாலிபம் இருக்கும் வரைதான்!

வாசமொடு பாசமொடு
வந்துறவு நாடுவதும்
வரவுகள் நிலைக்கும் வரைதான்!

கோடுவிழும் மேனிதனில்
கோடிநரை தோன்றியபின்
கூடுவது என்ன சுகமோ?

கூடும்விற கூடுவெருங்
கூடுஎன வீழ்ந்தபினர்
கோவணமும் கூட வருமோ?

நாடிவிடு கண்ணனடி
தேடிவிடு கண்ணன்முகம்
நண்ணுவது அந்த சுகமே!

நாயகனை மாயவனை
தூயவனை மாலவனை
நல்லவனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment