திருவண்ணாமலை தீபத் திருநாளை முன்னிட்டு, கிரிவல பாதையில், ரிக்
வேதத்தின், 7,8 அஷ்டகா ஞான பாராயணமும், கிருஷ்ண யஜுர் வேதத்தின், நான்காவது
பாட ஞான பாராயணமும், நடக்க உள்ளது. திருவண்ணாமலை தீப திருநாள் அடுத்த
மாதம் துவங்குகிறது. அதை முன்னிட்டு, திருவணணாமலை கிரிவல பாதையில் உள்ள,
அருணாத்ரி வேதா வேதாந்த போஷகா சபாவின் சார்பில், காஞ்சி சங்கர மடத்தில்,
சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது.
குறிப்பாக, ரிக் வேதத்தின், அஷ்டகா ஞான பாராயணமும், கிருஷ்ண யஜுர்
வேதத்தின் நான்காவது பாட ஞான பாராயணமும், நடக்க உள்ளது. இப்பாராயண
நிகழ்ச்சி, அடுத்த மாதம், 8 முதல் 17 வரை நடக்கிறது. மேலும், ரமண
மகரிஷியின், அக்ஷரமாலையின் விளக்க உரை, மஹாபக்த விஜய உபன்யாசம், ரகுமாயி
சமேத பாண்டு ரங்க விவாகம் மற்றும் நாம சங்கீர்த்தனம் போன்றவையும்
நடக்கிறது.
இதில், கிருஷ்ண பிரேமி, முரளிதர சுவாமிகள், ஜெயகிருஷ்ண தீட்சிதர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment