காஞ்சி மஹா ஸ்வாமிகளின் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு அக்ஷரத்தையும் 'தெய்வத்தின் குரலாக' ஏற்று, அதை அப்படியே தமது கையெழுத்து மூலமும், ஒலி நாடாவிலும் பதிவு செய்து, அவற்றைத் தொகுத்து 'தெய்வத்தின் குரலாக' வெளியிட்டார் ஸ்ரீ ரா கணபதி என்ற மஹான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி பத்திரிக்கையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
'காஞ்சி மஹா ஸ்வாமிகளின் தர்சன பாக்கியம் பெற்ற பலர் - அந்த தர்சனத்தில் தாம் பெற்ற பயனை தம் சுற்றத்தாருடன் மட்டுமே பகிர்ந்து கொண்டு பரவசம் அடைகிறார்கள். அத்தகையவர்கள் தமக்கு ஏற்பட்ட உண்மையான அனுபவங்களை அடியேனுக்கு ஆதார பூர்வமாக, எழுதினால், அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிடலாமே? எழுதி அனுப்புங்கள்.'
இந்த அறிக்கை மஹா ஸ்வாமிகளின் கவனத்திற்கு வந்தது. அவர்கள் உடனே ரா. கணபதி அவர்களை வரவழைத்தார்கள்.
'எனக்கு ஏதோ பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு நீ செய்ய ஆரம்பிக்கிற காரியம் சரியில்லை. கஷ்டப்படுகிறவர்கள் என்னிடம் வந்து தமது தொல்லைகளைத் தெரிவிக்கிறார்கள்.'

அவற்றை நான் ஆதரவுடன் கேட்கிறேன். அவற்றை அலட்சியம் செய்யாமல், நான் நுணுக்கமாக கேட்டுக் கொள்ளும்போதே, 'பெரியவாள் கேட்டுக் கொள்கிறார்கள்' நமக்கு ஆறுதல் கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் அளிப்பது சந்த்ர மௌலீஸ்வரர் பிரசாதம் தான். அந்த பிரசாதத்தை பக்தியோடு ஏற்றுக் கொள்பவர்களுக்கு நல்லது நடக்கிறது. அவ்வளவு தான். அதில் என் செயல் ஒன்றும் இல்லை. அவர்கள் அப்படி நினைப்பதற்கு நான் பொறுப்பும் இல்லை. நான் ஏதோ பண்ணி அவர்களுடைய சிரமத்தைப் போக்குகிறேன் - என்ற பிரேமையை வளர்க்கக் கூடாது. அந்த முயற்சியை கைவிடு' என்று ஆணையிட்டார்கள்.
அதனை ஏற்று ரா. கணபதி அவர்கள் கல்கியின் அடுத்த இதழிலேயே 'நான் பெரியவாள் மகிமை பற்றி எழுதப் போவதில்லை. எவரும் எனக்கு செய்திகள் அனுப்ப வேண்டாம்' என்று அறிக்கை விட்டார்கள்.
அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி தனக்கு பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மஹான்கள் நினைக்கவே மாட்டார்கள். மஹான்களிடம் அருள் பெற்றவர்கள் தான் அந்த நன்றியோடு வெளியிடுகிறார்கள்.
அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி தனக்கு பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மஹான்கள் நினைக்கவே மாட்டார்கள். மஹான்களிடம் அருள் பெற்றவர்கள் தான் அந்த நன்றியோடு வெளியிடுகிறார்கள்.
நன்றி: சமர்த்த ராமதாச சரிதம் புத்தகத்தில் இருந்து... ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயன் மாமா அவர்கள். via Shri Karthi Nagaratnam > Sage of Kanchi
No comments:
Post a Comment