சுவாமிகளின் வரலாற்றைப் பார்க்கும் போது இளமையில் சிவந்த நிறமும், நெடிய தோற்றமுமாக இருந்திருக்கிறார். பேச்சு இல்லை, உறக்கம் இல்லை, ஆடை உடுத்துவது இல்லை, தன்னிலை மறந்து சதா சர்வ காலமும் பரம்பொருளை நினைத்து இருக்கும் யோக நிலையில் இருந்திருக்கிறார். மழை வெயிலை பொருட்படுத்தாது அலைந்து கொண்டிருந்திருக்கிறார்.
பூர்வீகம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை, ஆனாலும் கும்பகோணத்திற்குக் கிழக்கே 8 கி.மீ தொலைவில் திருபுவனம் என்றொரு (மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது) ஊரில் இருந்ததாகவும், கும்பகோணத்தில் இருந்து சென்ற அன்பர்கள் அவரைப் பார்த்து, கும்பகோணத்தில் நல்ல ஒரு இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் திருபுவனம் அன்பர்கள் மறுக்கவே அவரின் திருவுள்ளம் அறிய அவரிடம் பணிய அன்றிரவு திருபுவனம் அன்பர்கள் கனவில் பரம்பொருள் –கம்பகரேசுவரப் பெருமான் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூற சுவாமிகள் கும்பகோணம் வந்ததாக அறிய முடிகிறது.
சுவாமிகளின் புகழ் நாளுக்கு நாள் ஊரெங்கும் பரவியது. அவரின் அருள் கடாட்சம் பல வியாதிகளையும், மக்களுடைய கஷ்டங்களையும் போக்கியது. பற்பல ஞானிகளும் துறவிகளும் சுவாமிகளுக்கு தொண்டு செய்தார்கள். அருணாச்சல சுவாமிகள், யாழ்பாணத்து சுவாமிகள், கள்ளியடி சுவாமிகள்,என்கிற திண்டுக்கல் சபாபதி சுவாமிகள் கோட்டாறு அண்ணாமலை சுவாமிகள், வாடிப்பட்டி சொக்கையா சுவாமிகள், மருதாநல்லூர் சச்சிதானந்த சுவாமிகள், மதுரை சுவாமிகள், திருநெல்வேலி சிதம்பர சுவாமிகள், நாராயண சுவாமிகள், சொக்கலிங்க சுவாமிகள், சுவாமிமலை சிற்றம்பல சுவாமிகள் போன்ற மகான்கள் சுவாமிகளுக்குத் தொண்டு செய்வதை பெரும் பேறாக கருதினர்.
சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வருகை தந்த போது மௌன சுவாமிகளின் தரிசனம் பெற்றதாக அறிய முடிகிறது. மூன்று நாட்கள் தொடர்ந்து இவ்வாறு தரிசனம் பெற்றதாகவும் அப்பொழுது அருளொளி தம்மீது பாய்வதை சுவாமி விவேகானந்தர் உணர்ந்திருக்கிறார்.
இவ்வாறு நாளுக்கு நாள் சுவாமிகள் புகழ் உலகெங்கும் பரவியது. அன்னிபெசண்ட் அம்மையார், அருண்டேல் முதலியவர்கள் சுவாமிகளின் தரிசனம் பெற்றனர்.
யாழ்பாணத்துச் சுவாமிகள் இப்பொழுது மௌனசுவாமிகள் அருள் பாலித்துவரும் இடத்தை வாங்கி தந்ததாக தெரிகிறது. அன்னிபெசண்ட் அம்மையார் மடத்திற்கு செல்லும் வழியில் வளைவு (arch )அமைத்திருக்கிறார்.
சுவாமிகளின் சூட்சும காலம் வந்தது போலும், விகாரி வருடம் 22.4.1899 சித்திரை மாதம் 11ம் தேதி உத்திர நட்சத்திரத்தில் இரவு 10 மணிக்கு பரம்பொருளோடு ஐக்கியமானார்.
அன்பர்கள் வருந்தினர், சுவாமிகள் சித்தியாகிவிட்டதை அனைவருக்கும் தெரிவித்தனர், பின்னர் திருமேனிக்கு அபிஷேக செய்வித்து அடக்கம் செய்தனர், திருமேனியில் லிங்க பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
சுவாமிகள் - (மௌனசுவாமிகள்) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் ஞான யோகி என்று ரிஷிகேசத்து சிவானந்த சுவாமிகள் கூறியிருக்கிறார்.
மௌன சுவாமிகள் சமாதி இருக்குமிடம்
கும்பேஸ்வரன் கோயிலுக்கு மேற்கே சுமார் ½ கி.மீ (தஞ்சாவூர் செல்லும் சாலையில்) தொலைவில் அமைந்துள்ளது. தெருவின் ஆரம்பத்தில் அன்னிபெசண்ட் அம்மையார் அமைத்த வளைவு இடம்பெற்றிருக்கும்.

நன்றி: http://siddharstamilnadu.blogspot.in/
No comments:
Post a Comment