Contact Us

Name

Email *

Message *

Friday, 4 October 2013

கல் மூங்கில்

திருவண்ணாமலை என்று சொன்னால் கிரி பிரதக்ஷணத்தை நினைத்து கொள்கிறோம். வடாற்காட்டில் அந்த திருவண்ணாமலைக்கு மேற்கே பதினெட்டே மைலில் இன்னொரு மலைக்கும் கிரி பிரதக்ஷண விசேஷம் இருக்கிறது. திருவண்ணாமலை கிரி பிரதக்ஷணம் எட்டு மைல் என்றால் அந்த இன்னொரு பிரதக்ஷணமோ பதினாலு மைல். திருவண்ணாமலையில் அந்த எட்டு மைல் பிரதக்ஷண பாதை சௌகரியமானதா இருக்கிறது என்றால், இந்த பதினாலு மைல் பாதையோ ஒரே கல்லும் முள்ளும் மேடும் பள்ளமுமாவே பெரும்பாலும் இருக்கும். சில இடங்களில் ஒற்றையடி பாதையும் சில இடங்களில் அதுவும் கூட இல்லாமலும் இருக்கும். ஓடைகள் குறுக்கே குறுக்கே வரும். பார்க்க அழகு. தாண்டி போகவோ சிரமம். தேஹ சிரமம் நிறைய பட்டால் தான் புண்ய யாத்ரைக்கு பலன் ஜாஸ்தி என்ற அபிப்ராயப்படி இந்த கிரி பிரதக்ஷணத்துக்கே அதிக பெருமை தரணும்.

அது என்ன மலை என்றால் பர்வத மலை. பர்வதம் என்றாலே மலை தான். 'மலை என்றால் இதுதான்' என்கிற மாதிரி இதற்கு பர்வத மலை என்று பெயர் இருக்கிறது. பர்வதம் என்பதை தமிழில் 'பருப்பதம்' என்பார்கள். தேவாரத்தில் திருப்பருப்பதம் என்றே ஒரு ஸ்தலத்தை சொல்லி இருக்கிறது. அது இதுதானா என்றால் - இல்லை. தெலுங்கு தேசத்தில் கர்னூல் ஜில்லாவில் உள்ள ஸ்ரீ சைலம் தான் தேவாரம் சொல்லும் திருப்பருப்பதம். ஸ்ரீ - திரு, சைலம் - பருப்பதம். சைலம் என்றால் மலை. சிலா என்றால் கல். கல் மயமானது சைலம்.

பர்வத மலையில் குறிப்பாக ரெண்டு புனிதமான வஸ்துக்கள் கிடைக்கின்றன. ஒன்று மஹா பில்வம். மற்றது கல் மூங்கில். சாதரணமாக நாம் பார்க்கும் வில்வம் மூன்று தனித்தனி இலைகள் ஒரு கொம்பில் இருப்பதாகவே இருக்கும். 'த்ரிதளம்' என்பார்கள். ஆனால், அபூர்வமாக இன்னொரு தினுசு உண்டு. ஏகாதச ருத்ரர்கள் என்பதற்கிணங்க இதில் பதினோரு தளங்கள் கிளையின் தண்டே தெரியாமல் ஒன்றோடு ஒன்று ஒரு சிமெட்ரியில் ஒட்டி கொண்டு இருக்கும். அதுதான் மஹா பில்வம். ஒன்பது தளங்களாக இருப்பதும் உண்டு. சிவ பூஜைக்கு ரொம்பவும் உகந்த இந்த அபூர்வ தினுசு வில்வ மரங்கள் பர்வத மலையில் இருக்கின்றன. அதேபோல். சாதரணமாக மூங்கில் என்றால் அது போலாக (உள்ளீடு அற்றதாக) தானிருக்கும். அதனால் தான் புல்லாங்குழல் பண்ண முடிகிறது. ஆனால், த்வாரம் இல்லாமல் உள்ளே அடைத்து இருக்கிற ஓர் அபூர்வ மூங்கில் வகையும் உண்டு. அது தான் கல் மூங்கில். நாங்கள் தண்டம் வைத்து கொண்டிருக்கிறோமே, இது அந்த கல் மூங்கிலாகத்தான் இருக்க வேண்டும். பர்வத மலையில் இது கிடைக்கிறது. மடத்துக்கு - தண்டத்துக்கு - அங்கேயிருந்து தான் மூங்கில் தருவிப்பது வழக்கம்.



நன்றி: கோபுர தரிசனம் ஏப்ரல் 2013 இதழ்.

No comments:

Post a Comment