Contact Us

Name

Email *

Message *

Friday, 14 June 2013

श्रीललिताष्टोत्तरशतस्तोत्रनामावलिः (Sri Lalitha Ashtothrasathanamavali)


மேகநாதசுவாமி கோவில், திருமீயச்சூர்

சிவஸ்தலம் பெயர் திருமீயச்சூர்

இறைவன் பெயர் மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர்
 
இறைவி பெயர் லலிதாம்பிகை, சௌந்தரநாயகி

பதிகம் திருஞானசம்பந்தர் - 1



மிழகத்தில் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள "கஜப்ரஷ்ட விமானம்" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும் துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது. இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

தலத்தின் சிறப்பு: சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காணலாம். இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன்
மீயச்சூரைத் தொழுது வினையை வீட்டுமே.

2. பூ ஆர் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்
நா ஆர் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி
ஏ ஆர் மலையே சிலையாக் கழி அம்பு எரி வாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

3. பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத்
தன் நேர் பிறர் இல்லானைத் தலையால் வணங்குவார்
அந் நேர் இமையோர் உலகம் எய்தல் அரிது அன்றே.

4. வேக மத நல் யானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோடு ஆகப் படிதம்பல பாட
நாகம் அரைமேல் அசைத்து நடமாடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச்சூரானே.

5. விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்று உடையார் மீயச்சூராரே.

6. குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில் நம்பன்
மிளிரும் மரவம் உடையான் மீயச்சூரானே.

7. நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார்
கோல வடிவு தமது அம் கொள்கை அறிவு ஒண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே.

8. புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேல் கரந்தார் உமை அஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.

9. காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார்
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார்
கோதி வரிவண்ட் அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச்சூராரே.

10. கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாகம் உடையார் பெரிய வரை வில்லால்
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.

11. வேடம் உடைய பெருமான் உயும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ்ஊர் ஐந்தும் மொழிந்து உள்கி
ஆடும் அடியார் அகல் வானுலகம் அடைவாரே.


श्रीललिताष्टोत्तरशतस्तोत्रनामावलिः 


रजताचलशृंगाग्रमध्यस्थायै नमो नमः
हिमाचलमहावंशपावनायै नमो नमः
शंकरार्धांगसौन्दर्यशरीरायै नमो नमः
लसन्मरकतस्वच्छविग्रहायै नमो नमः
महातिशयसौन्दर्यलावण्यायै नमो नमः
शशांकशेखरप्राणवल्लभायै नमो नमः
सदा पञ्चदशात्मैक्यस्वरूपायै नमो नमः
वज्रमाणिक्यकटककिरीटायै नमो नमः
कस्तूरितिलकोद्भासिनिटिलायै नमो नमः
भस्मरेखाङ्कितलसन्मस्तकायै नमो नमः ॥१०॥

विकचांभोरुहदललोचनायै नमो नमः
शरच्चांपेयपुष्पाभनासिकायै नमो नमः
लसत्कनकताटंकयुगलायै नमो नमः
मणिदर्पणसंकाशकपोलायै नमो नमः
तांबूलपूरितस्मेरवदनायै नमो नमः
सुपक्वदाडिमीबीजरदनायै नमो नमः
कंबुपूगसमच्छायकन्धरायै नमो नमः
स्थूलमुक्ताफलोदारसुहारायै नमो नमः
गिरीशबद्धमांगल्यमंगलायै नमो नमः
पद्मपाशाङ्कुशलसत्कराब्जायै नमो नमः॥२०॥
 
पद्मकैरवमन्दारसुमालिन्यै नमो नमः
सुवर्णकुंभयुग्माभसुकुचायै नमो नमः
रमणीयचतुर्बाहुसंयुक्तायै नमो नमः
कनकांगदकेयूरभूषितायै नमो नमः
बृहत्सौवर्णसौन्दर्यवसनायै नमो नमः
बृहन्नितंबविलसद्रशनायै नमो नमः
सौभाग्यजातशृङ्गारमध्यमायै नमो नमः
दिव्यभूषणसन्दोहरंजितायै नमो नमः
पारिजातगुणाधिक्यपदाब्जायै नमो नमः
सुपद्मरागसंकाशचरणायै नमो नमः ॥३०॥
 
कामकॊटिमहापद्मपीठस्थायै नमो नमः
श्रीकण्ठनेत्रकुमुदचन्द्रिकायै नमो नमः
सचामररमावाणीवीजितायै नमो नमः
भक्तरक्षणदाक्षिण्यकटाक्षायै नमो नमः
भूतेशालिंगनोद्भूतपुलकांग्यै नमो नमः
अनंगजनकापांगवीक्षणायै नमो नमः
ब्रह्मोपेन्द्रशिरोरत्नरञ्जितायै नमो नमः
शचीमुख्यामरवधूसेवितायै नमो नमः
लीलाकल्पितविध्यण्डमण्डलायै नमो नमः
अमृतादिमहाशक्तिसंवृतायै नमो नमः  ॥४०॥
 
एकातपत्रसाम्राज्यदायिकायै नमो नमः
सनकादिसमाराध्यपादुकायै नमो नमः
देवर्षिसंस्तूयमानवैभवायै नमो नमः
कलशोद्भवदुर्वासपूजितायै नमो नमः
मत्तेभवक्त्रषड्वक्त्रवत्सलायै नमो नमः
चक्रराजमहायंत्रमध्यवर्त्यै नमो नमः
चिदग्निकुण्डसंभूतसुदेहायै नमो नमः
शशाङ्कखण्डसंयुक्तमकुटायै नमो नमः
मत्तहंसवधूमन्दगमनायै नमो नमः
वन्दारुजनसन्दोहवन्दितायै नमो नमः ॥५०॥
 
अन्तर्मुखजनानन्दफलदायै नमो नमः
पतिव्रतांगनाभीष्टफलदायै नमो नमः
अव्याजकरुणापूरपूरितायै नमो नमः
निरंजनचिदानन्दसंयुक्तायै नमो नमः
सहस्रसूर्येन्द्वयुतप्रकाशायै नमो नमः
रत्नचिन्तामणिगृहमध्यस्थायै नमो नमः
हानिवृद्धिगुणाधिक्यरहितायै नमो नमः
महापद्माटवीमध्यनिवासायै नमो नमः
जाग्रत्स्वप्नसुषुप्तीनां साक्षिभूत्यै नमो नमः
महातापौघपापानां विनाशिन्यै नमो नमः ॥६०॥
दुष्टभीतिमहाभीतिभञ्जनायै नमो नमः
समस्तदेवदनुजप्रेरकायै नमो नमः
समस्तहृदयांभोजनिलयायै नमो नमः
अनाहतमहापद्ममन्दिरायै नमो नमः
सहस्रारसरोजातवासितायै नमो नमः
पुनरावृत्तिरहितपुरस्थायै नमो नमः
वाणीगायत्रीसावित्रीसन्नुतायै नमो नमः
नीलारमाभूसंपूज्यपदाब्जायै नमो नमः
लोपामुद्रार्चितश्रीमच्चरणायै नमो नमः
सहस्ररतिसौन्दर्यशरीरायै नमो नमः ॥७०॥
 
भावनामात्रसंतुष्टहृदयायै नमो नमः
नतसंपूर्णविज्ञानसिद्धिदायै नमो नमः
त्रिलोचनकृतोल्लासफलदायै नमो नमः
श्रीसुधाब्धिमणिद्वीपमध्यगायै नमो नमः
दक्षाध्वरविनिर्भेदसाधनायै नमो नमः
श्रीनाथसोदरीभूतशोभितायै नमो नमः
चन्द्रशेखरभक्तार्तिभञ्जनायै नमो नमः
सर्वोपाधिविनिर्मुक्तचैतन्यायै नमो नम:
नामपारायणाभीष्टफलदायै नमो नम:
सृष्टिस्थितितिरोधानसंकल्पायै नमो नम: ॥८०॥
 
श्रीषोडशाक्षरीमंत्रमध्यगायै नमो नम:
अनाद्यन्तस्वयंभूतदिव्यमूर्त्यै नमो नम:
भक्तहंसवतीमुख्यनियोगायै नमो नम:
मातृमण्डलसंयुक्तललितायै नमो नम:
भण्डदैत्यमहासद्मनाशनायै नमो नम:
क्रूरभण्डशिरच्छेदनिपुणायै नमो नम:
धराच्युतसुराधीशसुखदायै नमो नम:
चण्डमुण्डनिशुंभादिखण्डनायै नमो नम:
रक्ताक्षरक्तजिह्वादिशिक्षणायै नमो नम:
महिषासुरदोर्वीर्यनिग्रहायै नमो नम:  ॥९०॥
 
अभ्रकेशमहोत्साहकारणायै नमो नम:
महेशयुक्तनटनतत्परायै नमो नम:
निजभर्तृमुखांभोजचिन्तनायै नमो नम:
वृषभध्वजविज्ञानतपस्सिध्यै नमो नम:
जन्ममृत्युजरारोगभञ्जनायै नमो नम:
विरक्तिभक्तिविज्ञानसिद्धिदायै नमो नम:
कामक्रोधादिषड्वर्गनाशनायै नमो नम:
राजराजार्चितपदसरोजायै नमो नम:
सर्ववेदन्तसिद्धान्तसुतत्वायै नमो नम:
श्रीवीरभक्तिविज्ञाननिदानायै नमो नम: ॥१००॥
 
अशेषदुष्टदनुजसूदनायै नमो नम:
साक्षात्श्रीदक्षिणामूर्तिमनोज्ञायै नमो नम:
हयमेधाग्रसंपूज्यमहिमायै नमो नमः
दक्षप्रजापतिसुतावेषाढ्यायै नमो नमः 
सुमबाणेक्षुकोदण्डमण्डितायै नमो नमः
नित्ययौवनमांगल्यमंगलायै नमो नमः
महादेवसमायुक्तमहादेव्यै नमो नमः
चतुर्विंशतितत्वैकस्वरूपायै नमो नमः॥१०८॥

No comments:

Post a Comment