அந்தணனுக்குத் தனிச் சிறப்பும், முதன்மையும் எதனால் என்றால், அவன் செய்வன எல்லாம் அவனுக்காக மட்டும் செய்யவில்லை.அவன் எல்லாக் காரியங்களுக்கும் சங்கல்பம் பண்ணும்போதே "ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்றுதான் சொல்கிறான். மனை,மக்களுக்காக நினைப்பதில்லை அது போலவே, இத்தனை கஷ்டப்பட்டு, பணம் காசு, தேகசுகம், பிரச்னைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்கிறானே அதன் பலனையாவது தனக்கென்று எடுத்துக் கொள்கிறானா என்றால் அதுவுமில்லை. எல்லாவற்றையும் "நாராயணாயேதி சமர்ப்பயாமி" என்று அவன் காலடியில் போட்டு விடுகிறான். நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கும் இந்த ஏற்பாடே, மிக அழகு.
பரமேஸ்வரப் ப்ரீத்தியாகத் தொடங்கியதை அவரிடமே கொடுக்காமல் நாராயணனுக்கு சமர்ப்பிப்பதிலேயே ஹரியும், சிவனும் ஒன்றே என்று ஆகிவிடுகிறதில்லையா? ஒரே ஆளை, ஒருவர் அண்ணா என்றும், வேறொருவர் அப்பா என்றும், ஒருவர் சித்தப்பா என்றும், ஒருவர் அத்திம்பேர் என்றும் கூப்பிடுவது போலத்தான் இதுவும்.
பரமேஸ்வரப் ப்ரீத்தியாகத் தொடங்கியதை அவரிடமே கொடுக்காமல் நாராயணனுக்கு சமர்ப்பிப்பதிலேயே ஹரியும், சிவனும் ஒன்றே என்று ஆகிவிடுகிறதில்லையா? ஒரே ஆளை, ஒருவர் அண்ணா என்றும், வேறொருவர் அப்பா என்றும், ஒருவர் சித்தப்பா என்றும், ஒருவர் அத்திம்பேர் என்றும் கூப்பிடுவது போலத்தான் இதுவும்.
இத்தனையும் நாராயணன் காலடியில் கொண்டு கொட்டினால் அவ்வளவு பலனையும் வைத்துக்கொண்டு அவர்தான் என்ன செய்வார் என்று யோசிக்கிறீர்களா..? இந்த உலகையே பரிபாலனம் பண்ணுபவர் அவரல்லவா? ஒவ்வொருவர் வேண்டுவது அனைத்தையும் கொடுப்பதற்கு நிதி வேண்டாமா? அதனால்தான் இந்த ஏற்பாடு. எனவே, என் குடும்பம்,எனது படிப்பு,எனது வசதிகள்,என் வாழ்க்கை என்று மட்டும் எண்ணிக்கொண்டிராமல், உலக நன்மைக்காக அந்தணர் செய்வதே வேள்வி என்பதை உணர வேண்டும்.
அதனை ஒழுங்காகச் செய்யாவிடில், மழை வளம் குன்றும்; எல்லாமே அழியும்.அந்தணனுக்கு வரும் சிறப்பு,அவன் உழைப்பால் வருவது.அவன் எதுவும் செய்யாமல் வேள்விப் பயனை அனுபவிப்பது என்பது ஒருவகைத் திருட்டு என்றே கொள்ள வேண்டும்.வங்கியில் எதுவும் போடாமல், யாரோ போட்டதை எடுத்து அனுபவிப்பதுபோல் இதுவும் பெரும் குற்றமே.
நன்றி: திரு.வரகூரான் நாராயணன்
No comments:
Post a Comment