Contact Us

Name

Email *

Message *

Friday, 28 June 2013

மகான்களின் தரிசனம் - குரு தக்ஷிணாமூர்த்தி

சுமார் 200 வருடங்களுக்கு முன் திருச்சிக்கு அருகில் கீழாலத்தூர் என்ற கிராமத்தில் திரு. சிவ சிதம்பரம், மீனாம்பிகை அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருணாசலம். பரம்பொருளின் அருளால் பிறவி ஞானம் பெற்று ஓதாதுணர்ந்தார்.  இவர் செய்த சித்துகள் எல்லாம் தீராத நோய்களையும், பலருடைய வேதனைகளையும், குணப்படுத்தியுள்ளது.

சுவாமிகளின் பெயருக்கு ஒரு காரணம் இருக்கிறது. சித்தூர் சோமனாத முதலியாருக்கு தீராத குன்மம் வந்துவிட்டது. சிதம்பரம் நடராஜர் சன்னதியில் நோய் தீராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக முறையிட்டார். உடனே அசரிரீ எழுந்து திருவாரூர் தக்ஷிணாமூர்த்தியை பார், வியாதி குணமாகும் என்றது.


இவரும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்தார். நோய் குணமுடைய வில்லை. பின் மிகவும் மனம் வேதனையுற்று பரம்பொருளை வேண்ட அவர் ஞான சித்தன் இந்த ஊரில் திரிகிறான். அவனிடம் செல் என்று கூற அவரும் சுவாமிகளின் தரிசனம் பெற்றார். அவர் உண்ட உணவிற்கு பிறகு எஞ்சிய உணவை இவருக்கு அளிக்க இவருடைய நோய் குணமாயிற்று. அன்று முதல் சுவாமிகளுக்கு தெட்சிணாமூர்த்தி என்ற பெயர் உருவாயிற்று.

சுவாமிகள் இவ்வாறு அருளாட்சி நடத்திய காலத்தில் ஒரு நாள் முடிந்தது, முடிந்தது, முற்றும் முடிந்தது என்று திருவாய் மலர்ந்து கி.பி 1836 ஆவணி மாதம் பன்னிரண்டாம் தேதி புதன் கிழமை பூர்வ பட்சம் திருதியை உத்திர நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பகல் 12 மணி அளவில் பரம்பொருளோடு பரிபூரண சிவ சொரூபத்தில் கலந்தனர்.

சுவாமிகளின் சமாதி லிங்க பிரதிஷ்டை செய்து திருவாரூர் கமலாலய தெப்பக் குளத்திற்கு தென் மேற்கில் அம்மையப்பன் செல்லும் சாலையில் சாலைக்கு தென்புறம் அமைந்துள்ளது.



நன்றி: http://siddharstamilnadu.blogspot.in/

No comments:

Post a Comment