இந்த பத்ரினாத் தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும் உண்டு. அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து விட்டார்கள். அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார். பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 4
No comments:
Post a Comment