ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம்.
ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே, அதுதான் பரம்பொருள்.
ஸத் (இருப்பு) பரமேச்வரன்;
இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது
சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது.
இந்த ஆனந்தமே சுப்ரமண்யர்.
சிவம் என்கிற மங்களமும்,
அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உயர்வான ஸ்தானம் அவர் சுப்ரமண்யர்;
ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
No comments:
Post a Comment