Contact Us

Name

Email *

Message *

Thursday, 29 September 2016

Soundarya Lahari - Sloka: 46


Beneficial Results: 
புத்திரப் பிராப்தி Begetting of male progeny.
Detachment (vairaagyam), activation of agna chakram


ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव य-
द्द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलम् ।
विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः
सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥ ४६॥

இடம் பெயர்ந்த பாதிமதிகள் 

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத் 
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம் |
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித: 
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: || 46 ||

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.

அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.

யத் லலாடம் - உன் நெற்றியானது; லாவண்யத்யுதி - நிர்மலமான நிலவு; ஆபாதி - ப்ரகாசிக்கிறதோ; மகுடகடிதம் - கீரிடத்தில் இருக்கும்; த்விதீயம் - இரண்டாவதான; சந்த்ர சகலம் - அந்த சந்த்ர பிம்பம்; மந்யே - நினைக்கிறேன்; உபயமபி - சிரசில் இருக்கும் அர்த்த சந்திரனும், நெற்றியாக இருக்கும் அர்த்த சந்திரனும் ஆகிய இரண்டும்; விபர்யாஸந்யாஸாத் - வித்தியாசமான வளைவுகளைக் கொண்டிருக்கும்; மத: ஸ்ம்பூயச - சரியாக பொருந்துவதால்; ஸுதாலேபஸ்யூதி: - அம்ருதத்தால் பூசப்பட்ட/நிறப்பப்பட்ட; ராகா ஹிமகர: - பூர்ண சந்திரனாக; பரிணமதி - ஆகின்றது.

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • சாருசந்த்ர  கலாதரா 
  • அஷ்டமீசந்த்ர  விப்ராஜ தளிகஸ்தல சோபிதா

lalāṭaṃ lāvaṇya dyuti vimala-mābhāti tava yat
dvitīyaṃ tanmanye makuṭaghaṭitaṃ candraśakalam |
viparyāsa-nyāsā dubhayamapi sambhūya ca mithaḥ
sudhālepasyūtiḥ pariṇamati rākā-himakaraḥ || 46 ||

I suspect oh, mother,
That your forehead,
Which shines with the beauty of the moon,
Is but an imprisoned half moon,
By your glorious crown,
For If joined opposite
To the inverted half moon in your crown,
It would give out the nectar like luster,
Of the moon on a full moon day.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:46 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1091- 1098 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment