Contact Us

Name

Email *

Message *

Sunday, 25 September 2016

Atmarpanastuti - Sloka 40


चारुस्मेराननसरसिजं चन्द्ररेखावतंसं
फुल्लन्मल्लीकुसुमकलिकादामसौभाग्यचोरम् ।
अन्तःपश्याम्यचलसुतया रत्नपीठे निषण्णं
लोकातीतं सततशिवदं रूपमप्राकृतं ते ॥ ४०॥

சாருஸ்மேரானனஸரஸிஜம் சந்த்ரரேகாவதம்ஸம் 
புல்லன்மல்லீ குஸுமகலிகா தாம ஸெளபாக்யசோரம் |
அந்த: பச்யாம்யசல ஸுதயா ரத்னபீடே நிஷண்ணம்
லோகாதீதம் ஸததசுபதம் ரூபமப்ராக்ருதம் தே || 40 || 

மனதின் தியான ஸமாதியில் உதிக்கும் ஈச்வரஸ்வரூப ஸாக்ஷாத்காரத்தை சித்திரத்தில் வரைவது போல வர்ணித்துக் கூறுகிறார். ஈச்வரனின் சரீர காந்தியை மலரும் தருவாயிலிருக்கும் மல்லிகை மொட்டுகளின் மாலைக்கு ஒப்பிடிகிறார். அதில் வெண்மை, மணம், மென்மை, குளிர்ச்சி, இவை யெல்லாம் தோன்றுகின்றன. கருணாமூர்த்தியின் வதனத்தில் மந்தஹாஸம் தவழுகிறது. முடியில் இளம் பிறை ஒளி வீசுகிறது. அந்த ஸ்வரூபம் எங்கும் காணக்கிடைக்காத திவ்யங்களமானது. 224 லோகங்களுக்கு அப்பாலிருந்து பிரகாசிப்பது. அத்தகைய உன் ரூபம் எனக்கு இப்பொழுது தென்படுகிறது. (அடுத்த சுலோகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த: பச்யாம் என்ற வாக்யத்திற்கு நான் காண்பேனா? என் அந்திய காலத்தில் உன் திருவுருவத்தை நான் காண்பது ஸாத்யமாகுமா? என்று அர்த்தம் செய்து கொள்வதே உசிதம் எனத் தோன்றுகிறது.)

chArusmerAnanasarasijaM chandrarekhAvataMsaM
phullanmallIkusumakalikAdAmasaubhAgyachoram |
antaHpashyAmyachalasutayA ratnapIThe niShaNNaM
lokAtItaM satatashivadaM rUpamaprAkRutaM te || 40 ||

I see in my mind Your supreme form with Your lotus face with a charming smile, with the crescent moon on Your forehead, that defeats the beauty of a garland of jasmine buds, sitting on a throne of gems with the Daughter of the Mountain, beyond the worlds, ever bestowing auspiciousness.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment