Contact Us

Name

Email *

Message *

Thursday, 1 September 2016

Soundarya Lahari - Sloka: 44


Beneficial Results: 
நலம் சேர்க்கும் சீமந்தம் Prosperity (sowbhagyam) for women.
Cures hysteria as well as other diseases and sufferings, enables person to gain mastery over others.


तनोतु क्षेमं न-स्तव वदनसौन्दर्यलहरी
परीवाहस्रोतः-सरणिरिव सीमन्तसरणिः।
वहन्ती- सिन्दूरं प्रबलकबरी-भार-तिमिर
द्विषां बृन्दै-र्वन्दीकृतमेव नवीनार्क केरणम् ॥ ४४ ॥

நலம் சேர்க்கும் சீமந்தம் [வகிடு]

தநோது க்ஷேமம் நஸ்தவ வதனசெளந்தர்யலஹரி-
பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்தஸரணி: |
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபலகபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தைர்வந்தீக்ருதமேவ நவீநார்க கேரணம் || 44 ||

அம்மா!, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.

பெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது] இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர். இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.

வதந - முகத்தின்; செளந்தர்ய - அழகிய; லஹரி - வெள்ளம்; பரீவாஹ - ப்ரவாஹம்; ஸ்ரோத: - வழியும்; ஸரணிரவ - கால்வாய் போன்ற; ஸீமந்த ஸரணி - வகிடாக இருக்கும் ரேகை; கபரீபார - கேச பாரம்; திமிர - கருப்பான; த்விஷாம் ப்ருந்தை: எதிரிக் கூட்டம்; பந்தீக்ருதம் - சிறை செய்யும்; நவிநார்க்க கிரணமிவ - இளஞ்சூரியனது கதிர்கள் போல்; சிந்தூரம் - குங்குமம்; வஹந்தி - தரித்த; தனோது - கொடுக்கட்டும்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 1

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • ஸிந்தூர திலகாஞ்சிதா 
  • நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா

tanotu kṣemaṃ na-stava vadanasaundaryalaharī
parīvāhasrotaḥ-saraṇiriva sīmantasaraṇiḥ |
vahantī- sindūraṃ prabalakabarī-bhāra-timira
dviṣāṃ bṛndai-rvandīkṛtameva navīnārka keraṇam || 44 ||

Oh mother, let the line parting thine hairs,
Which looks like a canal,
Through which the rushing waves of your beauty ebbs,
And which on both sides imprisons,
Your Vermillion , which is like a rising sun
By using your hair which is dark like,
The platoon of soldiers of the enemy,
Protect us and give us peace.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:44 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1091- 1098 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment