Beneficial Results:
ஸர்வ ஜயம் Victory in everything.
Discovery of hidden treasures, gaining of lost property. Ability to clear misunderstanding of situations and people. Great wisdom.
Discovery of hidden treasures, gaining of lost property. Ability to clear misunderstanding of situations and people. Great wisdom.
विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः
कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका ।
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया
எண்வகை கண்நோக்கு
விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா |
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகரவிஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே || 49 ||
அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் விசாலா என்றும், மங்களகரமானதால் கல்யாணி என்றும், இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா என்றும், கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் தாரா என்றும், வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் மதுரா என்றும், ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் போகவதீ என்றும், சகல உலகங்களையும் காப்பதால் அவந்தீ என்றும் கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.
இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கமாம். இந்த 8 விதமான பார்வைகளாவன; உள்ளார்ந்த, ஆச்சர்யமான, முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய, சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய, மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம். இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது, ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.
ஸம்க்ஷோபணம் - குழப்பம்; த்ருவம் விஜயதே - நிச்சயமாக விளங்குகிறது; தத் தத் - அந்தந்த; நாம வ்யவஹரண யோக்யா - பெயர்களால் அழைக்கும் யோக்கியதை உடைய; பஹுநகர - அநேக நகரங்கள்; விஸ்தார விஜயா - விஸ்தாரமாக விஜயம் செய்ய; அவந்தீ - காப்பாற்றுகின்ற; ஆபோகவதிகா - ஆழ்ந்த; கிமபி மதுரா - வர்ணிக்க முடியாத மாதூர்யமான; க்ருபா - கருணை; தாராதாரா - ப்ரவாஹத்துக்கு ஆதாரமான; குவலையை: - இந்தீவர புஷ்பம்; அயோத்யா - ஜெயிக்க முடியாத; ஸ்புடருசி - விரிந்த காந்தியுடையது; கல்யாணி - மங்களமான; தே திருஷ்டி - உன் பார்வை.
கண்நோக்கின் பெயர் |
வெளிப்படும் நிலை | சக்தி |
---|---|---|
விசாலா | உள்முகமாக மலர்ந்த பாதி மூடிய கண்கள் | ஸம்க்ஷோபம் |
கல்யாணீ | வியப்பு | ஆகர்ஷணம் |
அயோத்யா | காதல் வயப்படுதல் | த்ராவணம் |
தாரா | ஆலாஸ்யம் | உன்மாதனம் |
மதுரா | சஞ்சலம் | வசியம் |
போகவதி | அன்புமிக்கது | உச்சாடனம் |
அவந்தீ | மயக்கம் | வித்வேக்ஷணம் |
விஜயா | பாதி மூடிய கண்கள் | மாரணம் |
ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 39, 79
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
- விசாலாக்ஷீ
- கல்யாணீ
- துராதர்ஷா
- போகிநீ
- நிராபாதா
- நிருபப்லவா
- தயாமூர்த்தி
- ரக்ஷாகரீ
- நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ
- விஜயா
viśālā kalyāṇī sphutaruci-rayodhyā kuvalayaiḥ
kṛpādhārādhārā kimapi madhurāஉஉbhogavatikā |
avantī dṛṣṭiste bahunagara-vistāra-vijayā
dhruvaṃ tattannāma-vyavaharaṇa-yogyāvijayate || 49 ||
The look from your eyes, Oh goddess
Is all pervasive,
Does good to every one,
Sparkles everywhere,
Is a beauty that can never be challenged,
Even by blue lily flowers,
Is the source of rain of mercy,
Is sweetness personified,
Is long and pretty,
Is capable of saving devotees,
Is in the several cities as its victory..
And can be called by several names,
According to which aspect one sees.
Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:49 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1152 - 1158 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)
Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment