Scroll down to read in English
"சில்பி" யின் ஓவியங்கள் ஜகத்ப்ரஸித்தி. அவருடைய ஓவியங்களில் அந்தந்த கோபுரக் கலையழகும், தெய்வங்களின் சிலையழகும் நம் முன் தத்ரூபமாக தெரியும். அவர் மஹா பெரியவாளின் அத்யந்த பக்தர். அவருடைய ஓவியங்களில் அவ்வளவு நுட்பமாக தெய்வத் திருவுருவங்களை வரைவது பற்றி கேட்டபோது, "அவனோட கண்கள்ள ஸூர்யன் இருக்கு" என்று பெரியவாளே சொல்லியிருக்கிறார் என்றால், அவர் தெய்வீக கலைஞர் என்பதில் என்ன சந்தேஹம்?
அவருக்குப் பெரியவாளை முதன்முதலாக தர்சனம் பண்ணவே ஒரு சில மாதங்கள் ஆனது. ஒருநாள் இரவு லாந்தர் விளக்கொளியில் "சில்பி"க்குத் தான் யார் என்பதை உணரவைத்தார்.
"ஒனக்கு நெறைய ஜன்மா ஆய்டுத்து. எல்லா ஜன்மாலேயும் நீ ரொம்ப பகவத் பக்தி பண்ணியிருக்கே. ஏகப்பட்ட கோவில்கள்ள ஸ்தபதியா நெறைய கைங்கர்யம் பண்ணியிருக்கே. இதான் ஒனக்கு கடேசி ஜன்மா! இந்த ஜன்மால ஒன்னோட இந்தப் புனிதமான கலையை எதுக்காகவும் கொஞ்சங்கூட தளர்த்தி காம்ப்ரமைஸ் பண்ணிக்காதே! எம்முன்னாடி இப்போ ஸத்யப்ரமாணம் பண்ணிக்கோ! என்னன்னா...தெய்வீகமான சித்ரங்கள் மட்டுந்தான் எழுதுவேன்..ன்னு திடம் பண்ணிக்கோ. ஒன்னோடது ரொம்பப் பவித்ரமான கலை. வேணுங்கற அனுக்ரஹம் ஒனக்கு இருக்கு. எல்லாவித சில்ப ஸாஸ்த்ரமும், ஸாமுத்ரிகா லக்ஷணங்களும் ஒனக்கு அத்துப்படி! இதுகளை நீ எங்கியும் போய் படிச்சுத் தெரிஞ்சுக்க வேணாம். போ! பழேபடி, லோக வாழ்க்கைக்குப் போ! ஒன்னோட சித்ரங்கள் மூலமா, அதுகள் இருக்கற ஒரொரு க்ருஹத்லயும் தெய்வ ஸான்னித்யத்தை கொண்டுவா!..." தெய்வத்தின் குரல் அவருள் இறங்கியது.
லீவு போட்டுவிட்டு, ஊர் ஊராக, க்ராமம் க்ராமமாக பல கோவில்களுக்கு கான்வாஸை எடுத்துக்கொண்டு போய் வரைய ஆரம்பித்தார். ஆனால் அதற்கு அவர் பல சவால்களை ஏற்க வேண்டியிருந்தது.
கர்ப்பக்ருஹத்துக்குள் அமர்ந்து அந்த மூர்த்தியை சித்திரமாக எழுதும்போது மிகுந்த ஆசாரத்தை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
அங்கு அவர் வரையும் போது, அங்குள்ள எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அவர் மாற்றக் கூடாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே வரைய வேண்டும்.
அவருடைய கற்பனையை எதிலும் கொண்டுவரக் கூடாது.
சில்ப ஸாஸ்த்ரத்தை அவர் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
ஸாமுத்ரிகா லக்ஷணப்படி சிலா மூர்த்தங்களை அவர் விவரிக்கலாம்.
கர்ப்பக்ருஹத்துக்குள் ஏற்றப்பட்டிருக்கும் தீபங்களில் எத்தனை வெளிச்சம் வருகிறதோ, அதைக் கொண்டுதான் வரையவேண்டும். அதற்கு அதிகமாக எந்த லைட்டும் கிடையாது.
அந்த இடத்துக்குள் அமர்ந்து அவர் வரைவதற்கு முன்போ, வரையும் போதோ, த்யானம் பண்ணும்போது அந்த த்யானத்தில் தோன்றும் ஸ்வரூப மாற்றங்களை அவர் சித்திரங்களில் கொண்டுவரலாம்.
இப்படியாக, அவருடைய சித்திரங்களைப் பார்ப்பவர்களுக்கு, அந்தந்தக் கோவில் கர்ப்பக்ருஹங்களில் அலைமோதும் "தெய்வீக சக்தி"யை அந்தச் சித்திரங்களில் உணர்ந்து அனுபவிக்க வைக்கும் ரஹஸ்யம், அவருடைய வரைகலையிலும், வர்ணத் தீட்டிலும் தெரியவேண்டும்.
பெரியவாளுடைய பேரன்புக்குப் பாத்ரமான சில்பிக்கு பெரியவாளுடைய திருவுருவைச் சித்திரமாக வரைய வேண்டும் என்று ரொம்ப ஆசை. அவர் மனைவி பத்மாவதிக்கும் அந்த ஆசை அவரைவிடத் தீவிரமாக இருந்தது. முன்கூட்டியே ஒரு லெட்டர் போட்டுவிட்டு பெரியவாளை தர்சனம் பண்ண பர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்து தர்சனமும் பண்ணினார்.
"பெரியவாட்ட ஒரு தாழ்மையான விண்ணப்பம். பெரியவாளோட திருவுருவத்த சித்திரமா வரையறதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்"
"அப்டியா! அப்டீன்னா....நீ என்னைப் படமா எழுதிப் பாக்கணுங்கறயோ? நீதான் மாலியோட சிஷ்யனாச்சே! ஒன்னால என்னைச் சித்திரத்துக்குள்ள அடக்கிட முடியும்ன்னு நெனைக்கறியா?.." வாஸ்தவம். எல்லையே இல்லாத ஒண்ணை நாலு சட்டத்துக்குள்ள அடக்க முடியுமா? சில்பி எதுவும் சொல்லாமல் நின்றார். ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பினார்.
திடீரென்று ஒருநாள் சில்பியை மடத்துக்கு வரும்படி ஆக்ஞை ஆனது. அது ஒரு நடுப்பகல் நேரம்.
"என்னை சித்திரமா எழுதணும் எழுதணும்ன்னு ஆசைப்பட்டியே! ஆரம்பி..."
பெரியவா உட்கார்ந்திருந்ததோ திறந்த வெளியில்! உச்சி வெய்யில்! அப்படியே தரையில் உட்கார்ந்து பெரியவாளின் திவ்யமங்கள ரூபத்தை வரைய ஆரம்பித்தார். தரையில் சூடு தாங்கவில்லை. பாவம். சரியாக உட்காரக்கூட முடியாமல் ரொம்பவே தடுமாறினார் சில்பி. குழந்தையின் கஷ்டத்தை மஹாமாதா கண்டும் காணாதிருப்பாளா என்ன? அடுத்த க்ஷணம் பெரியவாளின் கண்களிலிருந்து கருணை வாரிதி பொங்கியோட ஆரம்பித்தது. ஆம். தக்ஷணமே தரை ஜில்லென்று குளிர்ந்தது! ஸூர்யன் மேகத்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். சுற்றுப்புற சூழலே சந்தரன் வசப்பட்டது போல் தண்னென்று குளிர்ந்தது.
சில்பி சித்திரத்தை வரைந்து முடித்தார். ஆனால் பெரியவாளுடைய திருவுருவ மேன்மையை முழுவதுமாக அதில் கொண்டு வர முடியவில்லை என்றே அவருக்குத் தோன்றியது. அவ்வோவியத்தை பெரியவாளுடைய திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு தயங்கியபடி " தயவு பண்ணி பெரியவா இதை ஏத்துண்டு எனக்குத் தரணும். என்னோட க்ருஹத்ல வெச்சு பூஜை பண்ண அனுக்ரஹம் பண்ணணும் " என்று சொன்னார். பெரியவா பதிலே சொல்லவில்லை. சில்பி மறுபடியும் " அப்டி ஆசீர்வாதம் பண்ணிக் குடுக்க வேணாம்..ன்னு பெரியவா நெனைச்சா, இது பெரியவாகிட்டயே இருக்கட்டும்" என்றார்.
பெரியவாளின் அருட்கரம் மெல்ல அந்த சித்திரத்தை எடுத்தது. அடுத்த க்ஷணம், அதைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அங்கிருந்தபடியே சற்று தொலைவில் தெரிந்த வரதராஜப் பெருமாள் ஆலயத்தை நோக்கி வணங்கியபடியே த்யானத்தில் ஆழ்ந்தார். பெரியவாளின் மூடியிருந்த தாமரை நயனங்களில் கண்ணீர் மல்கியது. சரியாக அதே க்ஷணம் "ஓம்!ஓம் !"என்று ஆலயமணியும் அடித்ததும், ஏற்கனவே தெய்வ ஸன்னிதானமாகத் திகழ்ந்து கொண்டிருந்த அந்த இடம், மனசுக்கும் வாக்குக்கும் எட்டாத ஒரு அற்புதமான அனுபவத்தை சில்பிக்கு அளித்தது.
பெரியவா மெல்லத் தன் கழுத்திலிருந்த துளஸி மாலையையும்,வில்வ மாலையையும் கழற்றி, அந்தச் சித்திரத்தின் மேல் வைத்து, அக்ஷதையும்,கல்கண்டையும் அதில் போட்டு ஆசீர்வதித்து சில்பியிடம் குடுத்து, தன் இரு கரங்களையும் தூக்கி ஆசிர்வதித்தார். சில்பியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
It was a moment in unsung history when the Mahaperiva of Kanchipuram granted Aritst Silpi an audience, a moment that the artist had waited for over a month foregoing his work; it was a moment that changed the life of Artist completely.
In the late hours of the night, after the entire world had sunk into deep slumber, a dialog commenced between two people. One was a revered saint, loved and respected by all and the other was an artist, talented but unsung. Within the sacred room, in the light of an oil lamp, the bright and clear eyes of the saint lit up as he whispered the truth to the painter.
He said, “You have lived many lives, and in all of them you have worshipped the Lord sincerely. You have been a Sthapathi at various temples in your past lives where you have sculpted various forms of the Divine. This is your last birth. Do not dilute this sacred skill anymore. Take a vow that you shall paint the form of the divine alone hence forth. Your talent is divine, you are blessed, and you are already aware of the sciences of the Shila Shastra and Samudrika Lakshanam, you need no more education. Go into the world again, at sunrise tomorrow, with a goal to bring the divine into every home, through your paintings.”
The artist took leave and went across the land, to the remotest temples across the country to capture the very form of the Divine into his canvas. It was not an easy task that lay ahead, for the restrictions were tough, and only the orthodox and pure hearted could perform such a miraculous feet. He was told, "You shall not use your imagination, you shall not change anything that you see within the shrine chambers, you shall follow the law of Shilpa Shastra, and you shall capture the character of the Divine in various forms as described in the Samudrika Lakshanam. You shall not use extra lights, you shall work within the limited lamps lit within the chamber, and capture the changing swarupa(features) of the Divine as you meditate through the experience of painting. In this way, you shall capture the power of the Divine within the shrine chamber into your painting, the secret of which shall be expressed through the strokes of your brush."
The artist did as told, and started a whole new life dedicated to the Lord, to his Guru, his guide who blessed his every breath through the rest of his life.
Artist Silpi, was a family man, and his wife was a staunch devotee of the Paramacharya. As age took over, she was unable to visit the saint at the Kanchi Mutt and seek His divine blessings. She requested her husband to go and capture the essence of the Paramacharya in his painting and make a portrait that she could worship at home for the rest of her life.
In the year 1956, Artist Silpi made another visit to the Saint to capture His portrait, for his wife. It was a difficult proposition as the Saint did anything but co-operate. He moved around, to make it extremely difficult for the artist, testing his devotion and his patience to capture His being. When it finally ended, the painter held a master piece in his hand. An expression of devotion, one that captured every finger and toe that the Saint otherwise hid, one that even captured the divine light the enveloped the form of the Saint.
It was a true masterpiece. Within the color the Saint stares on, the clarity in His eyes so beautifully captured, the vilva leaves still so fresh, the divine glow of spiritualism in His being which no photograph could ever catch. The only lamp that lit the room lay at His feet, a light that lit up so much of his Divine form, this celebrated Saint has never been captured such. Within the chamber where he posed and watched an artist paint, He blessed this work by granting us a vision of His divine presence for the world to feel, to imbibe. Kanchi Mahaperiva lives on in the painting of Artist Silpi.

No comments:
Post a Comment