Beneficial Results:
ஸகலரோக நிவ்ருத்தி Relief from all diseases.
Physical Strength. Prayer to Chandi, materialization of wishes.
नखैर्नाकस्त्रीणां करकमलसंकोचशशिभि-
स्तरूणां दिव्यानां हसत इव ते चण्डि चरणौ ।
फलानि स्वःस्थेभ्यः किसलयकराग्रेण ददतां
दरिद्रेभ्यो भद्रां श्रियमनिशमह्नाय ददतौ ॥ ८९॥
கரகமலங்களை குவியச் செய்யும் நகச் சந்திரர்கள்
[ஸகலரோக நிவ்ருத்தி]
[ஸகலரோக நிவ்ருத்தி]
நகைர் நாகத்ரீணாம் கரகமலஸங்கோச சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணெள |
பலாநி ஸ்வஸ்த்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமநிசம் அன்ஹாய தததெள || 89 ||
சண்டிகே!, தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருக்ஷங்கள்/மரங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன. உன்னுடைய பாதங்களோ தரித்ரர்களுக்கும் சிறந்த ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இதனாதானோ உன்னுடைய பாதங்களில் இருக்கும் நகங்களது ஒளி தேவ-தாருக்களைப் பரிஹாசிப்பது போன்று தெரிகிறது?. உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபோல தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்த்ரீகளது தாமரைப் பூ போன்ற கரங்கள், (சந்திரன் கண்ட தாமரை கூம்பிக் கொள்வது போல) உனது பாதம் கண்டதும் கூப்பிய கைகளுடன் வணங்குன்றனர்?
அன்னை சண்ட-முண்டர்களை வதைத்த சண்டி ரூபமாக விளிக்கிறார் இப்பாடலில். அவளது சரணங்களை ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் கல்பக விருக்ஷத்திற்கு (கேட்டவற்றை எல்லாம் கொடுக்குமாம் கற்பகமரம்) ஒப்பாகச் சொல்லி, அந்த கற்பக மரமாவது தேவர்களுக்கு மட்டுமே எல்லாம் தரும், ஆனால் அன்னையின் சரணங்கள், சாதாரணர்கள் கேட்பதை விட அதிகமாக எல்லாம் தரும் என்கிறார். இவ்வாறு அன்னையின் சரணங்கள் கற்பக மரங்களைவிட சிறப்பாக இருப்பதால் அம்மரங்களை அன்னையில் பாதங்களில் இருக்கும் நகங்கள் பரிஹாசம் செய்கிறதாம்.
கிஸலய - துளிர்களாகிய; கராக்ரேண - கை நுனிகளால்; ஸ்வஸ்த்தேப்ய: - ஸ்வர்கத்தில் வசிக்கும் தேவர்களுக்கு; பலாநி தததாம் - பலன்களைக் கொடுக்கும்; திவ்யானாம் தரூணாம் - தேவலோகத்தில் இருக்கும் சிறந்த மரங்கள் (கற்பகம் போன்றவை); தரித்ரேப்ய: - தரித்திரர்களுக்கும் கூட; பத்ராம் ச்ரியம் - சிறப்பான ஐச்வர்யத்தை; அநிசம் - எப்போதும்; அந்ஹாய - சீக்ரமாக;தததெள - கொடுக்கிற; தே சரணெள - உன் பாதங்கள்; நாகஸ்த்ரீணாம் - தேவலோக ஸ்த்ரீகளுடைய; கரகமல - கைகளாகிய தாமரைப் பூக்களை; ஸங்கோச சசிபி: - சந்திர ஒளியால் கூப்பிய; நகை: - நகங்களால்; ஹஸத: இவ - பரிஹாசம் செய்வது போல.
ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 34
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
- நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா
nakhai-rnākastrīṇāṃ karakamala-saṅkoca-śaśibhiḥ
tarūṇāṃ divyānāṃ hasata iva te caṇḍi caraṇau |
phalāni svaḥsthebhyaḥ kisalaya-karāgreṇa dadatāṃ
daridrebhyo bhadrāṃ śriyamaniśa-mahnāya dadatau || 89 ||
Your moon like nails,
Oh mother who killed Chanda,
Which makes the celestial maidens,
Fold their hands in shame,
Forever tease your two feet,
Which unlike the holy trees in heaven,
(Which by their leaf bud like hands,
Give all they wish to the Gods,)
Give the poor people wealth and happiness,
Always and fast.
Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment