Contact Us

Name

Email *

Message *

Wednesday 13 June 2018

Soundarya Lahari - Sloka: 88


Beneficial Results: 
ஸர்வதுக்க நிவ்ருத்தி Freedom from all troubles.
Charming wild animals, Great fame and prosperity, enhances creativity, controls brutal force.

पदं ते कीर्तीनां प्रपदमपदं देवि विपदां
कथं नीतं सद्भिः कठिनकमठीकर्परतुलाम् ।
कथं वा बाहुभ्यामुपयमनकाले पुरभिदा
यदादाय न्यस्तं दृषदि दयमानेन मनसा ॥ ८८॥

அம்மிக் கல்லின் மேல் அலர்ந்த அரவிந்தம் 
[துஷ்ட மிருகங்களின் வச்யம்]

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபதம் அபதம் தேவி விபதாம் 
கதம் நீதம் ஸத்பி: கடிநகமடீ கர்பர துலாம் |
கதம் வா பாஹுப்யாம் உபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா || 88 ||

தாயே! கீர்த்தி/புகழுக்கு உரியதாகவும், ஆபத்துக்கள் அணுகமுடியாததாகவுமுள்ள உனது பாதங்களை, கடினமான ஆமையின் முதுகு ஓட்டிற்கு ஸமமானதாக கவிஞர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ?. பரம-தயவுடைய சிவனுக்கு உன்னுடனான விவாஹ காலத்தில் அதி-மிருதுவான உனது பாதங்களைகளை எடுத்து பாராங்கல்லான அம்மியில் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ?.

அம்பிகையின் பாதங்கள் பக்தர்களுக்கு புகழையும் அளித்து அவர்களுக்கு ஏற்படும் சகலவிதமான ஆபத்துக்களையும் போக்கவல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில், 'கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபாதன் விதா' என்று அம்பிகையின் அழகிய வளைந்த பாதங்களை ஆமையின் மேலிருக்கும் ஓட்டுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதைச் சொல்கிறார். கல்யாணங்களில் சப்தபதியின் போது பெண்ணின் பாதத்தை தனது கைகளால் எடுத்து அம்மியின் மேல் வைத்து மந்திரங்கள் உச்சரிப்பர். அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ என்று கேட்பதன் மூலமாக அன்னையின் பாதங்களது மென்மையை சிறப்பாகக் கூறுகிறார் ஆசார்யார்.

தேவி - அம்மா; கீர்த்தானாம் பதம் - கீர்த்திக்கு இடமான; விபதாம் அபதம் - ஆபத்துக்களுக்கு இடமில்லாத; தே - உன்; ப்ரபதம் - பாதத்தின் முன்பகுதி; ஸத்பி: - ஸாதுக்களால்/கவிஞர்களால்; கடின - கடினமான; கமடீகர்பர துலாம் - ஆமையின் மேல் இருக்கும் ஓடு; கதம் நீதம் - ஸமமாக எப்படிச் சொல்லப்பட்டது; தயமாநேந மநஸா - தயவோடு கூடிய மனசுள்ள;புரபிதா - பரமசிவனால்; உபயமநகாலே - உன்னுடைய விவாஹ/திருமண காலத்தில்; யத் - எந்தப் பாதங்களை; பஹுப்யாம் ஆதாய - கைகளால் எடுத்து; த்ருஷதி - அம்மியில்; கதம் வா ந்யஸ்தம் - எப்படித்தான் வைத்தாரோ?

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 59

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணுப்ரபதாந்விதா

padaṃ te kīrtīnāṃ prapadamapadaṃ devi vipadāṃ
kathaṃ nītaṃ sadbhiḥ kaṭhina-kamaṭhī-karpara-tulām |
kathaṃ vā bāhubhyā-mupayamanakāle purabhidā
yadādāya nyastaṃ dṛṣadi dayamānena manasā || 88 ||

Oh, Goddess Devi,
How did the poets compare,
The foreside of your merciful feet,
Which are the source of fame to your devotees,
And which are not the source of danger to them ,
To the hard shell of tortoise,
I do not understand.
How did he who destroyed the three cities,
Take them in his hand,
And place them on hard rock,
During your marriage?

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:88 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment