Contact Us

Name

Email *

Message *

Tuesday, 29 May 2018

Soundarya Lahari - Sloka: 87


Beneficial Results: 
செல்வச் செழிப்பு Accumulation of riches and jewellery.
Charming serpents, power to plan, to foresee things and get vast wealth.

हिमानीहन्तव्यं हिमगिरिनिवासैकचतुरौ
निशायां निद्राणं निशि चरमभागे च विशदौ ।
वरं लक्ष्मीपात्रं श्रियमतिसृजन्तौ समयिनां
सरोजं त्वत्पादौ जननि जयतश्चित्रमिह किम् ॥ ८७॥

தாமரையை வெற்றிகொள்ளும் திருவடித்தாமரை [ஸர்ப்ப வச்யம்]

ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரெள 
நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதெள |
வரம் லக்ஷ்மீபாத்ரம் ச்ரியமதைஸ்ருஜந்தெள ஸமயீனாம்
ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரமிஹ கிம் || 87 ||

தாயே!, பனிமலையிலேயே இருக்கக்கூடியவையும், இரவு, பகல், ஸந்த்யாகாலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும், ஸமயாசாரமுடைய பக்தர்களுக்கு லக்ஷ்மியைக் கொடுக்கக்கூடியதுமான உனது பாதங்கள், பனியில் நாசமடைந்தும், இரவில் உறங்கியும், லக்ஷ்மி விரும்புகிற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜயித்து இருப்பதில் வியப்பில்லை.

அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி. தாமரைப்பூ அதிக பனியில் கருகிவிடுமாம். சூரியனது கதிர் கண்டே மலரக்கூடியது தாமரை. தாமரைப் பூவில் லக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்வர். லக்ஷ்மியும் எப்போதும் தாமரையில் இருப்பதில்லையாம், தனக்கு இஷ்டமிருக்கையில்மட்டுமே வந்து அமர்கிறாளாம். இவ்வாறாக இரவில் மலராதும், பனியில் கருகியும், எப்போதாவது மஹா-லக்ஷ்மி அமரும் தாமரைப் பூவைவிட, அன்னையின் பாதங்கள் சிறப்பாக பனிமலையிலும், ஒருநாளின் எல்லா காலங்களிலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தருவதுமான தாமரை என்று ஒப்பு நோக்கிக் கூறியிருக்கிறார்.

ஹிமகிரி - பனிமலை; நிவஸைக சதுரெள - இருப்பிடத்தில் ஸாமர்த்தியமாகவும்; நிசி - இரவில்; சரமபாகே ச - அடுத்த ஸந்த்யா காலங்களிலும், பகலிலும்; விசதெள - மலர்ந்திருப்பதும், ஸமயினாம் - ஸமயாசாரமுள்ள பக்தர்களுக்கு; ச்ரியம் - லக்ஷ்மிகரத்தை; அதி ஸ்ருஜந்தெள - உண்டாக்குகிற; த்வத் பாதெள - உன் பாதங்கள்; ஹிமாநி ஹந்தவ்யம் - பனியில் நாசமாகிற; நிசாயாம் - இரவில்; நித்ராணாம் - உறங்குகின்ற; வரம் லக்ஷ்மி பாத்ரம் - லக்ஷ்மிக்கு விருப்பமான இடமான; ஸரோஜம் - தாமரைப் புஷ்பத்தை; ஜயத: - ஜயிக்கின்றது; இஹ சித்ரம் கிம் - ஆச்சர்யமென்ன?

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 90

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • பதத்வய  ப்ரபாஜால பராக்ருத  ஸரோருஹா

himānī hantavyaṃ himagirinivāsaika-caturau
niśāyāṃ nidrāṇaṃ niśi-caramabhāge ca viśadau |
varaṃ lakṣmīpātraṃ śriya-matisṛhanto samayināṃ
sarojaṃ tvatpādau janani jayata-ścitramiha kim || 87 ||

Oh mother mine,
The lotus flower rots in snow,
But your feet are aces in being in snow,
The lotus flower sleeps at night,
But your feet are wakeful night and after night,
The lotus makes the goddess of wealth Lakshmi live in it,
But your feet gives Lakshmi* to its devotees,
And so your two feet always wins over the lotus,
What is so surprising in this?

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment