Contact Us

Name

Email *

Message *

Sunday, 29 April 2018

Soundarya Lahari - Sloka: 85


Beneficial Results: 
துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits.
Relief from binding situations and people. Ability to bring about quick changes. Attainment of devotion to Devi.

नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो-
स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥ ८५॥

பரமசிவனும் தாங்கவிரும்பும் பாதாரவிந்தங்கள்

நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ: 
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே |
அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே
பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே || 85 ||

தாயே!, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.

உத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 11

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர  மண்டித  ஸ்ரீபதாம்புஜா
  • ப்ரபாஜால பராக்ருத  ஸரோருஹா
  •  ஸ்வாதீநவல்லபா

namo vākaṃ brūmo nayana-ramaṇīyāya padayoḥ
tavāsmai dvandvāya sphuṭa-ruci rasālaktakavate |
asūyatyatyantaṃ yadabhihananāya spṛhayate
paśūnā-mīśānaḥ pramadavana-kaṅkelitarave || 85 ||

We tell our salutations,
To thine two sparkling feet.
Which are most beautiful to the eyes,
And Painted by the juice of red cotton.
We also know well ,
That God of all animals, your consort,
Is very jealous of the asoka trees in the garden ,
Which yearn for kick by your feet.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment