Beneficial Results:
நேத்ர தோஷ நிவாரணம் Protection from evil eyes.
Victory over inimical people, controlling secret activities. Freedom from imprisonment; cures physical or mental problems. Causes rain.
तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिता
निलीयन्ते तोये नियतमनिमेषाः शफरिकाः ।
इयं च श्रीर्बद्धच्छदपुटकवाटं कुवलयम्
जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति ॥ ५६॥
கண்கள் [பந்த விமோசனம்; நேத்ர தோஷ நிவாரணம்]
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா: ।
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம்
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி॥ 56 ॥
அம்பிகே! அபர்ணா!, காதுகளை அடுத்து நீண்டிருக்கும் உனது கண்கள், காதுகளில் தங்களைப்பற்றி கோள் சொல்லுகின்றனவோ என்று பயந்த மீன்கள் மூடாத கண்களுடன் நீரிலேயே ஒளிந்து கொண்டிருக்கின்றன. உனது நேத்ரங்களில் வாசம் செய்யும் லக்ஷ்மியும் பகலில் நீலோத்பலங்களை விட்டு உன்கண்களுக்கு வந்திடுகிறது, இரவில் நீலோத்பலங்கள் மலர அப்புஷ்பங்களில் எழுந்தருளுகிறாள்.
மீனலோசனி, மீனாக்ஷி போன்ற பெயர்களை குறிக்கும் ஸ்லோகம் இது. அன்னையின் கண்களை மீன்களுக்கும், நிலோத்பல மலருக்கும் உவமையாகச் சொல்கிறார். அன்னையின் கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.
இந்த ஸ்லோகத்தில் அன்னையை அபர்ணா என்று கூறி விளிக்கிறார். "அபர்ணா" என்ற நாமத்திற்கு இரு பொருட்கள் உண்டு. பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து, அவர்களுக்கு ருணங்களை தீர்ப்பதால் அபர்ணா. அன்னை பார்வதியாகப் பிறந்து தபஸ் பண்ணும் சமயத்தில் இலையைக் கூட உண்ணாது கடுந்தவம் புரிந்தாளாம். பர்ணா என்றால் இலை, அபர்ணா என்றால் இலையையும் தவிர்த்தவள் என்று பொருள். [அபர்ணா து நிராஹாரா தாம் மாதா ப்ரத்யபாஷத: - ப்ரம்ம புராணம்] தவத்தின் போது இலையைக் கூட உண்ணாது தவிர்த்ததால் அபர்ணா என்று பொருள். பாஸ்கர ராயரது மனைவி, ஏழ்மையால் உண்ணவும் ஏதுமின்றி இருக்கையில் ராயர் அன்னையை 'அபர்ணா' என்றழைத்தவுடன் அவரது ருணத்தை தீர்க்க அன்னையே வந்ததாகச் சொல்வது நினைவுக்கு வருகிறது.
கர்ணேஜபநயந பைசுந்ய சகிதா: - காதுகளருகில் இருக்கும் கண்களது கோள் சொல்லுக்கு பயந்து; சபரிகா: - பெண்மீன்கள்; அநிமேஷா: - கண்களை மூடாது; தோயே நிலீயந்தே - நீரில் ஒளிந்துகொண்டு; நிபதம் - நிச்சயம்; இயம் ச ஸ்ரீ - உன் கண்களிலிருக்கும் லக்ஷ்மியும்; பத்தச்ச - மூடப்பட்ட; புடக - இதழ்களான; வாடம் - கதவுகள்; குவலயம் - நீலோத்பலம்; ப்ரத்யூஷே - காலையில்; ஜஹாதி - விட்டுவிடுகிறது; நிசி ச - ராத்திரியில்; தத் விகடய்ய - திறந்து கொண்டு {அரும்பான குவலய புஷ்பத்தை திறந்து கொண்டு}; ப்ரவிசதி - அதில் பிரவேசித்தல்;
ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 69
நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
- அபர்ணா
- வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா
tavāparṇe karṇe japanayana paiśunya cakitā
nilīyante toye niyata manimeṣāḥ śapharikāḥ |
iyaṃ ca śrī-rbaddhacchadapuṭakavāṭaṃ kuvalayaṃ
jahāti pratyūṣe niśi ca vighatayya praviśati|| 56 ||
Oh, She who is begotten to none,
It is for sure,
That the black female fish in the stream,
Are afraid to close their eyes.
Fearing that thine long eyes,
Resembling them all,
Would murmur bad about them,
In your ears to which they are close by.
It is also for sure,
That the Goddess Lakshmi,
Enters the blooming blue Lilly flowers,
Before your eyes close at night,
And reenter in the morn when they open.
Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:56 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1180 -1185 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)
Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com
http://www.krishnamurthys.com
No comments:
Post a Comment