Contact Us

Name

Email *

Message *

Wednesday, 8 February 2017

தைப்பூசச் சிறப்பு


தை மாசத்தில் பௌர்ணமியன்று பூச நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூசம் பல சிறப்புக்களைக் கொண்டது. பாரதம் மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் இடங்களான இலங்கை, சிஙகப்பூர். மலேசியா, பர்மா, தாய்லாந்து போன்றநாடுகளிலும் சிறப்பபாக கொண்டாடப்படுகிறது.

இராமனுக்கு தம்பியாகப் பிறந்து அவன் பொருட்டு தனக்கு கிடைத்த அரசுப் பதிவியையும் துச்சமாக மதித்து துறந்த, பரதன் பிறந்த நட்சத்திரம் பூசம். பூசத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சகோதர பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் வள்ளியை திருத்தணியில் மணம் புரிந்து திருக்காட்சி தந்த நாள் இந்த தைப்பூசத்தில்தான்.

அகத்தியர் சொல்படி இடும்பன் இருமலைகளையும் காவடி போல் தூக்கி வந்து பழனி முருகன் அமர்வதற்கு வசதியாக திருஆவினன்குடியில் வைத்த நன்நாள் தைப்பூசம்.

சிவனின் நெற்றிகண்ணில் தோன்றி சரவணப்பொய்கையில் உதித்து சூரபத்மனை சம்ஹாரம் செய்ய முருகனுக்கு ஆதிபராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் திரட்டி "வேல்" தந்த நன்நாள் "தைப்பூசம்"

வண்டுகள் மெய்க்காத மலர்களால் நடராஜனுக்கு பூசை செய்யவேண்டும் என்பதற்காகவே ஆதிசேஷன் புலிப்பாத முனிவராக அவதாரம் செய்து அம்பலத்தானின் நடனத்தை தேவர்கள் சூழ காணவேண்டும் ஆசையை நடராஜப்பெருமான் பூர்த்தி செய்தநாள் தைப்பூச நன்நாள்.

தன்னை மணக்க விரும்பி அது நடக்கமுடியாமல் போய் பூநாகம் தீண்டி மரித்த பூம்பாவையை அவர் அஸ்திகலசத்திலிருந்து திருஞானசம்பந்தர் எழுப்பிய நன்நாள் தைபூசம்

சிவனிடமிருந்து மந்திர உபதேசம் பெரும்போது பார்வதிதேவி அதில் நாட்டம் கொள்ளாமல் அருகே இருந்த மயில்மீது ஆசைகொண்டு அதில் லயிக்க, அதனால் சிவன் பார்வதியை "நீ மயிலாய் பூவுலகத்தில் பிறந்து என்னை அடைவாயாக"என்று சாபாபமிட அதன்படி மயிலையில் மயிலாகப் பிறந்து தவம் செய்து கற்பகம்பாள் என உருமாறி காபாலீஸ்வரனை அடைந்த நன்நாள் தைபூசம்.

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை என்று அழைத்த, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த திரு வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் சித்திவளாகம் என்ற இடத்தில் அன்னதானப் பணியை துவங்கிய நன்நாள் தைப்பூசம். மேலும் அவர் வடலூரில் ஜோதியில் இறைவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திகொண்ட நன்நாளும் தைப்பூசம் தான்.

திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதப்பெருமான் தன் அன்புச் சகோதரியான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசையுடன் காவேரிக்கரையில் வந்து அருட்காட்சி செய்த நன்நாள் தைப்பூசம்.

மத்யார்சுணம் என்று அழைக்கப்படும் திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரருக்கு பத்துநாள் திருவிழா முடிவில் பக்கதர்களுக்கு தரிசனம் அளிக்கும் நன்நாள் தைப்பூசம்.

இப்படி இந்த தைப்பூசம் சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம்,ஆகிய எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாள். இந்நாளில் அனைத்து தெய்வங்களையும் வணங்கி ஆசியைப்பெறுவோம்.

No comments:

Post a Comment