Contact Us

Name

Email *

Message *

Thursday, 2 May 2019

Shivananda Lahari - Sloka: 64


மனமே ஈசனின் பாதுகை | Mind is the footwear of Eswara 


वक्षस्ताडनमन्तकस्य कठिनापस्मारसंमर्दनं
भूभृत्पर्यटनं नमस्सुरशिरःकोटीरसंघर्षणम् ।
कर्मेदं मृदुलस्य तावकपदद्वन्द्वस्य गौरीपते
मच्चेतोमणिपादुकाविहरणं शंभो सदाङ्गीकुरु ॥ ६४॥

வக்ஷஸ்தாடன மந்தகஸ்ய கடினா பஸ்மார ஸம்மர்த்தனம்,
பூப்ரூத் பர்யடனம், சமத்ஸுரசிர: கோடீர சங்கர்ஷணம் |
கர்மேதம் ம்ருதுலஸ்ய தாவக பதத்வந்த் வஸ்ய கௌரீபதே,
மச்சேதோ மணிபாதுகா விஹரணம் சம்போ ஸயதாங்கீ குரு || 64 ||

கௌரியின் பதியாகிய சிவபிரானே! யமனின் மார்பில் உதைத்தல், அறிவை மயக்கக் கூடிய காக்கை வலிப்பு என்னும் (தாருகாவனத்தில் சிவனை எதிர்க்க வந்த முயலகன் என்ற அரக்கனை வீழ்த்தி அவன் முதுகின் மீதேறி நின்று அவனை நசுக்கினார் சிவபிரான். அந்த அரக்கனுக்கு அபஸ்மாரன் என்ற பெயருமுண்டு என்பதால், இந்த வரி அதையும் குறிக்கும்.) அபஸ்மாரம் என்னும் கடினமான நோயைப் போக்குதல், மலையில் சஞ்சாரம் செய்தல், வணங்கும் தேவர்களின் தலைகளிலுள்ள கிரீடங்களில் தங்கியிருத்தல், ஆகியனவெல்லாம் மிக மிருதுவான உன் இரு திருவடிகளுக்குப் பழக்கமானவை. அந்த வகையில் சம்புவே! எப்போதும் என் மனம் என்னும் ரத்தினப் பாதுகையை அணிந்துகொண்டு விருப்பம் போல் சஞ்சாரம் செய்யுமாறு வேண்டுகிறேன்.
                         
vakśas-tāḍana śankayā vicalito vaivasvato nirjarāḥ
koṭīrojjvala-ratna-dīpa-kalikā-nīrājanaṃ kurvate |
dṛśṭvā mukti-vadhūs-tanoti nibhṛtāśleśaṃ bhavānī-pate
yac-cetas-tava pāda-padma-bhajanaṃ tasyeha kiṃ dur-labham || 64 ||

Hey , Consort of Gowri, 
Your tiny tender pair of feet is engaged, 
In kicking at the chest of God of Death, 
In trampling over hard hearted Apasmara, 
In traveling on the mountains, 
And in being beside the crowns on the heads of Devas, 
Who prostrate before you. 
Oh, Lord Shambhu, 
Always recognize and be pleased to wear, 
The gem studded shoes of my mind and travel.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment