Contact Us

Name

Email *

Message *

Tuesday, 4 December 2018

Shivananda Lahari - Sloka: 54


மாலை வேளையில் மயக்கும் நடனம் | Mesmerising dance in the evening


सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक-
ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला ।
भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा
यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४॥

ஸந்த்யா கர்ம தினாதயயோ ஹரிஹரா காத ப்ரபூ தானக
த்வானோ வாரி தகார்ஜிதம் திவிஷதாம் த்ருஷ்டிச் சடா சஞ்சலா |
பக்தானாம் பரிதோஷ பாஷ்ப விததிர் வ்ருஷ்டிர் மயூரீ சிவா
யஸ்மின்னுஜ்வல தாண்டவம் விஜயதே தம் நீலகண்டம் பஜே || 54 ||

ஸந்தியா காலம், வெயில் காலத்தின் முடிவில் வரும் மழை காலத்தைப் போலவும்; விஷ்ணுவின் கரங்கள் அடிபடுவதால் தோன்றும் மிருதங்கத்தின் ஒலி, மேகத்தின் கர்ஜனையைப் போலவும்; தேவர்களின் பார்வைகள் மின்னல் கொடியைப் போலவும், பக்தர்களின் ஆனந்தக் கண்ணீர், பெரு மழையைப் போலவும், பார்வதி தேவி, பெண் மயிலைப் போலவும் உள்ள யாரிடத்தில், பிரகாசம் மிகுந்த நடனம் சிறப்பாகக் காணப்படுகிறதோ, அந்த - கருநீலக் கழுத்தையுடைய ஆண் மயிலைப் போன்ற - சிவபிரானை வணங்குகிறேன். வானத்தில் மழைமேகத்தைக் கண்டதும் ஆண் மயில் மகிழ்ச்சிகொண்டு பெண் மயிலின் முன்னால் ஆடுவதையும், மாலை வேளையில் மகிழ்ச்சியுடன் தன் துணைவியான பார்வதி தேவியின் முன் சிவன் மகிழ்ந்து நடனமாடுவதையும் ஒப்பிடும் பாடல்.
                
sandhyā gharma-dinātyayo hari-karāghāta-prabhūtānaka-
dhvāno vārida garjitaṃ diviśadāṃ dṛśṭiccaṭā cancalā |
bhaktānāṃ paritośa bāśpa vitatir-vṛśṭir-mayūrī śivā
yasminn-ujjvala-tāṇḍavaṃ vijayate taṃ nīla-kaṇṭhaṃ bhaje || 54 ||

I pray the blue necked God who is like a peacock. 
Whose glittering dance excels, 
Done in the dusk in the end of summer, 
With drum beats from the hands of Vishnu, 
Like the thunder of the clouds, 
With the shifting sights of Devas, 
Like the bright changing lightning, 
With the happy tears from eyes of devotees, 
Like the rainfall from the sky, 
And in front of Goddess Parvathy who is like the pea hen.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment