Scroll down to read in English
ஒரு ஸ்ராத்த தினத்தன்று விஸ்வாமித்ரரை தனது வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார் வசிஷ்டர். அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை கறி செய்து படைக்க வேண்டும் என்றார் விஸ்வாமித்ரர்.
உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்?
விஸ்வாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவே இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியாதா என்ன? இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் , ஓ, 1008 வகை காய்கறிகள் வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் என்றார்.
ஸ்ராத்த நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல் மற்றும் எட்டு வகை காய்கறி - ஒரு வாழை இலையில் எவ்வளவு கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவுதான் இருந்தன. விஸ்வாமித்திரர் கோபத்துடன் வசிஷ்டரை வினவினார். அவரோ நான்தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே அவளையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார் வசிஷ்டர்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அருந்ததி தானே முன் வந்து ஒரு ஸ்லோகத்தைக் கூறினாள்.
காரவல்லி சதம் சைவ வஜ்ரவல்லி சதத்ரயம்
பனசம் ஷட்சதம் சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே
ஒரு ஸ்ராத்த திதியன்று சமைக்கப்படும் சமையலில் பாகற்காய் கறி 100 கறிகளுக்குச் சமம், பிரண்டைத் துவையல் அல்லது கறி 300 கறிகளுக்குச் சமம், பலாப்பழம் 600 கறிகளுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் கறிகள் ஆயிற்று. இலையில் எண்ணிப் பாருங்கள், மேலும் எட்டு காய்கறிகள் வைத்திருக்கிறேன். ஆகமொத்தம் 1008 என்றாள்.
இதுதானே ஸ்ராத்தகால விதி, உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றாள். வசிஷ்டர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டு வாழ்த்தியும் விட்டுப் போனார்.
---
Once Sage Vasistha invited his arch enemy Sage Vishwamitra for a feast on a Śrāddha day. On the day of Śrāddha, the departed souls (one's ancestors, especially deceased parents) are propitiated. Brahmins and saints are fed on the day. The guests are worshiped as the representatives of the departed souls. Sage Vishvamitra promised to participate on one condition. He insisted that he must be served with 1008 curries (side dishes).
Sage Vasishta informed his wife Arundhati the condition laid by Sage Vishwamitra. On the day of Śrāddha, Sage Vishwamitra came and sat at the dining hall. But to his disappointment he saw only 10+ curries on the plantain leaf. When he angrily questioned Sage Vasishta, he told him to put the question to Arundhati as she was in charge of the food. Before Sage Vishwamitra questioned her, Arundhati recited a popular sloka (couplet) which made Sage Vishwamitra speechless.
कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं |
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते ||
Kaaravalli satam chaiva vajra valli satatrayam
Panasam shat satam chaiva sraardhakaalE VidhiiyatE
“If someone serves at the time of Śrāddha, Kaaravalli/Pagal/Bitter Gourd = 100 curry items, Astisamharaka/Pirandai/Veldt Grape = 300 curry items and Panasa/Palaa/Jack Fruit = 600 curry items. That is the rule for the ceremony.”
She served these three vegetable dishes along with 8 more items on the plantain leaf. So it came to 1008 items. Sage Vishwamitra was happy at the explanation from the chastest woman in the world and blessed her.
No comments:
Post a Comment