Contact Us

Name

Email *

Message *

Tuesday, 10 December 2013

தேடிவந்த சிதம்பரம் - "THEDIVANTHA CHITHAMBARAM"

தேடிவந்த சிதம்பரம் காணக்கிடைக்காத அபூர்வ படம்

காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக, உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில், தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும், அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.

இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.

சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர். மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. "தேடி வந்த சிதம்பரம்' படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.

This story was titled as "THEDIVANTHA CHITHAMBARAM". This was a year before his sidhi, when Maha Periyavaa was not feeling very well, one evening he called his disciples and told that he wanted to go to Chidambaram and pray Natarajar and also wish to see the, kunjithapatham. Kunjithapatham is an offering for Natarajar made out of various herbal roots. This is considered to cure many health related diseases also believed to give moksham.

Now his disciples were so worried how to take him to Chidambaram in this health condition. For their surprise, the next day, early morning before sunrise, the priests who do the poojai to Chidambaram temple came to visit Kanchi maha periyavaa with prasadam along with the kunchithapatham and requested to meet Kanchi maha periyavaa and give the offerings.

This put every disciples of Kanchi maha periyavaa into a great surprise. They went and informed maha periyavaa about the priests arrival and maha periyavaa signed the priests to come near him. He then accepted the offerings and kept the kunjithapatham on his head. This photo was taken then and this event is called as "Thedivantha chidambaram." The above picture is considered to be one of the rarest picture of maha periyavaa.

No comments:

Post a Comment