பொருளைத் தேடி அலைவதால் வாழ்க்கை தரம் உயர்வதில்லை. தரமான வாழ்வு என்பது அவரவர் பெற்றிருக்கும் மனநிறைவைப் பொறுத்த விஷயம்.
மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், கடவுளின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அது வேண்டும், இது வேண்டும் என்று ஏதாவது ஒன்றைத் தேடி அலையும் வரையில், எத்தனை பணம் இருந்தாலும் அவனை பரம ஏழை என்று தான் சொல்ல வேண்டும்.
சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல, மனதில் நிறைவேறாத ஆசைகளே கோபமாகத் திரும்பி, நம்மைப் பாவச் செயல்களில் தள்ளிவிடுகிறது.
பழைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதற்கு ஒரே வழி கடவுளின் திருவடியை சரணடைவது தான்.
No comments:
Post a Comment