प्रचरत्यभितः प्रगल्भवृत्त्या
मदवानेष मनः करी गरीयान् ।
परिगृह्य नयेन भक्तिरज्ज्वा
परम स्थाणुपदं दृढं नयामुम् ॥ ९७॥
ப்ரகல்ப வ்ருத்யா
மதவானேஷ மன: கரீ கரீயான் |
பரிக்ருஹ்ய நயேன பக்திரஜ்வா
பரம ஸத்தாணுபதம் த்ருடம் நயாமும் || 97 ||
பரமேசுவரனே ! மதம் பிடித்ததும் பெரியதுமான யானையாகிய என் மனம் அடங்காத போக்குக் கொண்டு எங்கெங்கோ அலைந்து திரிகிறது. இதை நீ எப்படியேனும் நயமாக பக்தி என்னும் கயிற்றால் கட்டி அன்பால் வசப்படுத்தி அசைவில்லாத நிலைக்களமாகிய உன் திருவடிக்குக் கெட்டியாகப் பிடித்து
அழைத்துச் செல்வாயாக! எப்படியேனும் ஈசனைத் தம் இதயக் கோயிலில் குடியமர்த்த வேண்டும் என விரும்பும் ஓர் அடியவரின் நயமான கோரிக்கையின் விளக்கம். (ஏற்கெனவே சிவானந்த லஹரியில் 21,36,38,39,40,44,45,46,47,59,64,75,77,78,84 ஆம் பாடல்களில் இதே பொருள் இருக்கிறது)
pracaratyabhitaḥ pragalbha-vṛttyā
madavān-eśa manaḥ-karī garīyān |
parigṛhya nayena bhakti-rajjvā
parama sthāṇu-padaṃ dṛḍhaṃ nayāmum || 97 ||
This big rutted elephant of my mind,
Wanders uncontrollably everywhere,
Oh Lord tie it with tact with the rope of devotion,
Hold it well and lead it to the ultimate stable state
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment