ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया
दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।
जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः
किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥
ஜ்வாலோக்ர ஸகலாமராதிபயத க்ஷ்வேல: கதம் வா த் வயா
த்ருஷ்ட கிஞ்ச கரே த்ருத: கரதலே கிம்பக்வ ஜம்பூ பலம் |
ஜிஹ்வாயாம் நிஹிதச்ச ஸித்த குடிகா வா கண்டதேசே ப்ருத
கிம் தே நீலமணிர் விபூஷண மயம் சம்போ மஹாத்மன் வத || 32 ||
சகல உயிர்களையும் காத்தருளும் சம்புவே! மகாத்மாவே! தீக் கொழுந்தின் கொடிய தன்மையுடன் அச்சமூட்டும் தன்மையும் கொண்ட விஷம் உன் கண்ணால் எப்படித்தான் பார்க்கப்பட்டதோ? அதை உள்ளங்கையில் ஏந்தி வைத்துக் கொண்டாயே, அது நாவற் பழமா என்ன? நாக்கில் வைத்துக் கொண்டாயே, சித்த வைத்திய மருந்தான குளிகையா அது? கழுத்தில் நிறுத்தி வைத்தாயே, அது நீலமணியால் செய்யப்பட்ட அழகிய அலங்கார ஆபரணமா, என்ன? எனக்குச் சொல்வாயாக!
jvālograḥ sakalāmarāti-bhayadaḥ kśvelaḥ kathaṃ vā tvayā
dṛśṭaḥ kiṃ ca kare dhṛtaḥ kara-tale kiṃ pakva-jambū-phalam |
jihvāyāṃ nihitaśca siddha-ghuṭikā vā kaṇṭha-deśe bhṛtaḥ
kiṃ te nīla-maṇir-vibhūśaṇam-ayaṃ śambho mahātman vada || 32 ||
How was the fierce flame like poison
Which made, all the courageous devas fear,
Seen by you , my Lord?
Was that fire carried in your hand,
Did it appear like the fully ripe plum fruit to you?
Was it not kept on your tongue,
Did it appear as pills from the Siddha doctor?
Was it not worn in your neck,
Did it appear like a blue gem ornament to you?
Oh , Shmabhu the great one , be pleased to tell.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment