Contact Us

Name

Email *

Message *

Thursday, 19 October 2017

Soundarya Lahari - Sloka: 72


Beneficial Results: 
யக்ஷிணி வச்யம் Enslave Yakshini
Freedom from all fears, safe travel and gets strength of mind.
Good for nursing mothers, increase in breast milk. Prosperity and peace of mind.


समं देवि स्कन्दद्विपवदनपीतं स्तनयुगं
तवेदं नः खेदं हरतु सततं प्रस्नुतमुखम् ।
यदालोक्याशङ्काकुलितहृदयो हासजनकः
स्वकुम्भौ हेरम्बः परिमृशति हस्तेन झडिति ॥ ७२॥

கலங்கிய கணபதியும், கலசத்திருமுலையும்
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை]

ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம் |
யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி || 72 ||

தாயே!, உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும், அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள் எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும். அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார்.

தேவதேவர்களுக்கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும். அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்குஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.

ஸ்கந்த - கந்தன்/முருகன்; த்விபவதந - விநாயகப் பெருமான்; பீதம் - பால் அருந்தும்; ப்ரஸ்னுத-முகம் - பால் சுரக்கும் காம்புகளுடைய; ஸ்தனயுக - நகில்கள் இரண்டும்; ந: - எங்களுடைய; கேதம் - துன்பத்தை; ஸததம் - எப்போதும்; ஹரது - போக்கடிக்கட்டும்; யத் - அந்த நகில்களை; ஆலோக்ய - பார்த்து; ஆசங்கா - சந்தேகித்து; ஆகுலித - கலங்கிய; ஹ்ருதய - மனத்துடன்; ஹேரம்ப - வினாயகர்; ஹாஸ-ஜனக: - சிரிப்பு உண்டாகும்படியாக; ஸ்வகும்பெள - தனது தலையில் உள்ள இரு கும்பங்களை; ஜடிதி - அவசரமாக; ஹஸ்தேன - கைகளால்; பரிம்ருசதி - தடவிப் பார்க்கிறார்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 21, 78

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா 
  • காமேச்வர ப்ரேமரத்ந 
  • மணிப்ரதிபண ஸ்தநீ 
  • குஹாம்பா
  • குஹஜந்மபூ:

samaṃ devi skanda dvipivadana pītaṃ stanayugaṃ
tavedaṃ naḥ khedaṃ haratu satataṃ prasnuta-mukham |
yadālokyāśaṅkākulita hṛdayo hāsajanakaḥ
svakumbhau herambaḥ parimṛśati hastena jhaḍiti || 72 ||

Our Goddess Devi,
Let your two cool breasts,
Which have faces that always,
Give out milk,
And are simultaneously drunk deeply.
By Skanda and the elepahant faced Ganesha,,
Destroy all our sorrows.
Seeing them and getting confused,
The Herambha feels for his two frontal globes,
To see whether they are there,
Making you both laugh.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment