Contact Us

Name

Email *

Message *

Sunday, 12 March 2017

Soundarya Lahari - Sloka: 57


Beneficial Results: 
ஸகல ஸௌபாக்யம் Wealth, fame, progeny and prosperity.
All round success and general prosperity and well-being.


दृशा द्राघीयस्या दरदलितनीलोत्पलरुचा
दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे ।
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता
वने वा हर्म्ये वा समकरनिपातो हिमकरः ॥ ५७॥

நீலோத்பல விழியும் நிலவின் கிரணமும் [ஸகல ஸௌபாக்யம்]

த்ருஷா த்ராகீயஸ்யா தரதளித நீலோத்பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே ।
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர: ॥ 57 ॥

மங்களங்களை அருள்பவளே!, சந்திரன் வனம் மற்றும் மாளிகை என்ற பேதம் இல்லாது எங்கும் சமமாகத் தன் கிரணங்களை வீசுவது போல, தீர்க்கமானதும், அன்றலர்ந்த நீலோத்பல புஷ்பத்தைப் போன்ற காந்தியுடையதுமான உன் கண்களின் கடாக்ஷ த்ருஷ்டியானது உன்னிலிருந்து விலகி தூரத்தில் இருப்பவனும், பாக்கியமில்லாதவனுமான என் மேலும் விழும்படி செய்வாயாக. இவ்வாறு செய்வதால் உனக்கு எந்த குறைவும் ஏற்படாது.

சந்திரனது கிரணங்கள் எப்படி எந்த வேற்றுமையும் பாராட்டாது எல்லா இடங்களிலும் குளிர்ச்சியுடைய ஒளியைப் பரவச் செய்கிறதோ அப்படியாக அன்னையவள் கருணை எவ்வித வித்தியாசமும் இல்லாது எல்லோருக்கும் அருள் தரக் கூடியது என்று கூறுகிறார் சங்கரர்.

சிவே - மங்களங்களை அருள்பவளே; த்ராகீயஸ்யா - அதிக நீளமுள்ள; தரதளித கொஞமாக மலர்ந்த; நீலோத்பல ருச - காந்தியுடைய நீலோத்பல மலர்; த்ருசா - கடாக்ஷ தீக்ஷண்யத்தால்; மாம் அபி - என்னையும்; க்ருபயா - கருணையால்; ஸ்நபய - ஸாநம் செய்தல்; அநேந - செய்வதால்; அயம் - அடியேன்; தந்யோ பவதி - க்ருதார்த்தனாக/உருப்படியாக ஆவான்; இயதா - இதனால்; தே - உனக்கு; ஹாநிர் ந ச - ஒருவித நஷ்டமும் இல்லை; ஹிமகர - சந்திரன்; வநே வா - காட்டிலும் சரி; ஹர்ம்யே வா - மாளிகையிலும் சரி; ஸமகர நிபாத: - கிரணங்களால் எங்கும் வியாபித்தல்

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 61

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸ்ரீசிவா 
  • சிவா
  • தராந்தோளித தீர்க்காக்ஷீ 
  • தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா
  • பவதாவ ஸுதாவ்ருஷ்டி
  • ஸாந்த்ரகருணா
  • தன்யா
  • ஸௌபாக்ய தாயிநீ

dṛśā drāghīyasyā daradalita nīlotpala rucā
davīyāṃsaṃ dīnaṃ snapā kṛpayā māmapi śive |
anenāyaṃ dhanyo bhavati na ca te hāniriyatā
vane vā harmye vā samakara nipāto himakaraḥ || 57 ||

She who is the consort of Lord Shiva,
Please bathe me with your merciful look,
From your eyes which are very long,
And have the glitter of slightly opened,
Blue lotus flower divine.
By this look I will become rich with all that is known,
And you do not loose anything whatsoever,
For does not the moon shine alike,
In the forest and palaces great.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:57 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1180 -1185 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment