Contact Us

Name

Email *

Message *

Thursday, 12 January 2017

Soundarya Lahari - Sloka: 53


Beneficial Results: 
தேவி ப்ரத்யக்ஷம் Vision of Devi.
Very good for renewing or restarting career ventures/personal relationships.

विभक्तत्रैवर्ण्यं व्यतिकरितलीलाञ्जनतया
विभाति त्वन्नेत्रत्रितयमिदमीशानदयिते ।
पुनः स्रष्टुं देवान् द्रुहिणहरिरुद्रानुपरतान्
रजः सत्त्वं बिभ्रत्तम इति गुणानां त्रयमिव ॥ ५३॥

முக்குணங்களைக் காட்டும் முக்கண்கள் 
[தேவி ப்ரத்யக்ஷம்; ஸகலலோக வசியம்]

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா 
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே |
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ || 53 ||

அம்பிகே, அஞ்சனத்தை தரித்திருக்கும் உனது கண்கள் வெவ்வேறான நிறங்களில் (வெண்மை, சிகப்பு,கருப்பு) இருப்பதானது ப்ரளய காலத்தில் உன்னிடம் மறைந்து போன பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வதற்காக வேண்டிய ரஜஸ், ஸத்வ, தமோ குணங்களோடு கூடியதாக இருக்கிறது.

அம்பிகையின் இரு-கண்களாக சூர்ய-சந்திரர்களும், நெற்றிக்கண்ணாக அக்னியும் இருப்பதாகச் சொல்லப்படும். இங்கே அன்னையின் கண்களைப் பற்றி வர்ணித்து, அதன் நிறங்களை மும்மூர்த்திகளுக்கு உரியதாகச் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக நமது கண்களில் கருவிழிகள் கருப்பாகவும், வெண்மை நிறைந்த பகுதியில் சிவப்பான நரம்புகளும் இருக்கிறது. இந்த நிறங்கள் முறையே ரஜஸ், ஸத்வ, மற்றும் த்மோ குணங்களுக்கானது. இதே போல ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகியோர் அன்னையின் ரஜஸ் ஸத்வ, மற்றும் தமோ குணங்களாகச் சொல்லுகிறார் இந்த ஸ்லோகத்தில். மஹா பிரளய காலத்தில் இவர்கள் மூவரும் அழிந்து ஜகதீஸ்வரியிடத்தில் சேர்வதாகச் சொல்கிறார்.

பிப்ரத் விபாதி - தரித்து இருப்பது; சத்வ, ரஜஸ், தம என்னும்; குணானாம் த்ரயம் இவ - மூன்று குணங்களைப் போல்; த்ருஹிண ஹரிருத்ரான் தேவாந் - பிரம்ம-சிஷ்ணு-சிவன் போன்ற தேவர்களை; புந: - மீண்டும்; ஸ்ரஷ்டும் - சிருஷ்டிக்கும்; விபக்த - வெவ்வேறான; த்ரைவர்ண்யம் - மூன்று வர்ணங்களை; உபரதாந் - மறைந்திருக்கும்; வ்யதிகரித - சேர்க்கப்பட்ட; லீலாஞ்ஜநதயா - கண்மையுடன் கூடிய; இதம் - இந்த; த்வந் நேத்ர த்ரிதயம் - உன்னுடைய மூன்று கண்களும்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 13

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவளீ 
  • வர்ண ரூபிணீ 
  • ஸ்ருஷ்டிகர்த்ரீ 
  • ப்ரஹ்மரூபா
  • கோப்த்ரீ 
  • கோவிந்தரூபிணீ
  • ஸம்ஹாரிணீ
  • ருத்ரரூபா 
  • வைஷ்ணவீ
  • ப்ரஹ்மாணீ

vibhakta-traivarṇyaṃ vyatikarita-līlāñjanatayā
vibhāti tvannetra tritaya mida-mīśānadayite |
punaḥ sraṣṭuṃ devān druhiṇa hari-rudrānuparatān
rajaḥ satvaṃ vebhrat tama iti guṇānāṃ trayamiva || 53 ||

Oh, Darling of God Shiva,
Those three eyes of thine,
Coloured in three shades,
By the eye shades you wear,
To enhance thine beauty,
Wear the three qualities,
Of satvam, rajas and thamas,
As if to recreate the holy trinity,
Of Vishnu, Brahma and Rudra,
After they become one with you,
During the final deluge.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment