Contact Us

Name

Email *

Message *

Monday, 29 July 2019

Shivananda Lahari - Sloka: 70


ஆராதனைக்கு எளிமையானவர் | Simple to worship  Him


अरहसि रहसि स्वतन्त्रबुद्ध्या
वरिवसितुं सुलभः प्रसन्नमूर्तिः ।
अगणितफलदायकः प्रभुर्मे
जगदधिको हृदि राजशेखरोऽस्ति ॥ ७०॥

அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர புத்த்யா
வரிவஸிதும் ஸுலப: ப்ரஸன்ன மூர்த்தி: |
அகணித பலதாயக: ப்ரபுர்மே
ஜகததிகோஹ்ருதி ராஜசேகரோஸ்தி || 70 ||

வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையில் ஏகாந்தமாக, ரகசியமாகவும் தன் சுயபுத்தியால் தொழுது போற்றுவதற்கு, பரமசிவன் மிக எளிதானவர். அருள்புரிய ஆயத்தமாகவும், நினைத்தற்கொண்ணாத அரிய நற்பயன்களை அளிக்கவும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களிலும் வல்லவராயும், தோன்றி அழியும் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவராயும், பிறையணிந்த பெருமானாகவும் விளங்குகின்ற அவர் இதோ என் இதயத்திலேயே இருந்து வருகிறார். உள்ளத்திலேயே உறைபவர் என்பதால் ரகசியமாய் வணங்கவும், எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால் வெளியில் விருப்பப்படி வணங்கவும் ஏற்றவர். (அதாவது எப்படி வணங்குவதாயினும் அதற்கேற்ப மிக எளிதானவர் சிவபிரான் என்பதே இதன் உட்பொருள்.)
                         
arahasi rahasi svatantra-buddhyā
vari-vasituṃ sulabhaḥ prasanna-mūrtiḥ |
agaṇita phala-dāyakaḥ prabhur-me
jagad-adhiko hṛdi rāja-śekharosti || 70 ||

In public and in secret, 
And with independent intellect, 
You are suitable to be worshipped.
Oh Lord ,who is pinnacle of graciousness, 
And oh my Lord ,who can grant countless blessings, 
So more than the impermanent world, 
You ,the lord with the moon, 
Is always in my heart.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment