Contact Us

Name

Email *

Message *

Saturday 25 August 2018

Soundarya Lahari - Sloka: 93


Beneficial Results: 
மனோரத சித்தி Fulfillment of desires.
Happiness, contentment, sound health and prosperity.

अराला केशेषु प्रकृतिसरला मन्दहसिते
शिरीषाभा चित्ते दृषदुपलशोभा कुचतटे ।
भृशं तन्वी मध्ये पृथुरुरसिजारोहविषये
जगत्त्रातुं शम्भोर्जयति करुणा काचिदरुणा ॥ ९३॥

சிவனுடைய கருணையின் உருவே தேவி [மனோரத சித்தி]

அராளா கேசேஷு ப்ரக்ருதி ஸரளா மந்த ஹஸிதே 
சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே |
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா || 93 ||

அம்பிகே!, பரமசிவனுடௌய மனதுக்கும் வாக்குக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்றழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய். கருணா சக்தியானது உனது கூந்தலில் சுருளாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும் மனதில் வாகைப் பூவைப் போல மிருதுத்தன்மையானதாகவும், நிகில்களில்கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினத்தைப் போன்ற கடுமையானதாகவும், இடையில் மிகுந்த மெலினமாகவும், மார்பும், நிதம்பமும் பருமனாகவும் விளங்குகிறது.

'காருண்ய விக்ரஹா' என்னும் த்ரிசதியில் வரும் நாமத்தை நினைவுபடுத்துவதாக இந்த ஸ்லோகம் இருக்கிறது.கருணாரஸத்தை அருணவர்ணமாகச் சொல்லுவது வழக்கம் என்றும், அந்த கருணையானது மூர்த்தியாக வந்திருப்பது போல சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் தேதியூரார்.

கேசேக்ஷு அராளா - கூந்தலில் சுருளாகவும்; மந்த ஹஸிதே - மந்தஹாசமான சிரிப்பில்; ப்ரக்ருதி ஸரளா - ஸ்வபாவமான ஸெளகுமார்யத்தோடும்; சித்தே - மனதில்; சிரீஷாபா - சிரீஷ குஸுமம் (வாகை மலர்)போல ம்ருதுவாகவும்; குசதடே - ஸ்தன ப்ரதேசத்தில்; த்ருஷதுபலசோபா - கருங்கல் போல கடினமாகவும்; மத்யே - மத்ய ப்ரதேசத்தில் (இடுப்பில்),ப்ருசம் தந்வீ - மிகவும் மெலிந்ததாகவும்; ரஸிஜாரோஹ - ஸ்தன ப்ரதேசத்திலும், நிதம்ப ப்ரதேசத்திலும்; ப்ருது: - பருத்ததாகவும்; அருணா - சரீரம் முழுவதும் சிவந்ததாகவுள்ள; சம்போ: - பரமேஸ்வரனுடைய; காசிக் கருணா - அழகுடைய கருணாமூர்த்தியான; ஜகத் த்ராதும் - லோகங்களைக் காப்பாற்றுவதற்காக; விஜயதே - வெற்றிகரமாக விளங்குகிறது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 42

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:


  • அருணாருண கௌஸும்ப 
  • வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ 
  • ஆரக்தவர்ணா 
  • ஸ்வபாவமதுரா 
  • தரஹாஸோஜ்வலந்முகீ
  • மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா
  • லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா
  • காமேச்வர ப்ரேமரத்ந 
  • மணிப்ரதிபண ஸ்தநீ
  • நீலசிகுரா
  • கருணாரஸ ஸாகரா
  • ஸர்வாருணா

arālā keśeṣu prakṛti saralā mandahasite
śirīṣābhā citte dṛṣadupalaśobhā kucataṭe |
bhṛśaṃ tanvī madhye pṛthu-rurasijāroha viṣaye
jagattratuṃ śambho-rjayati karuṇā kācidaruṇā || 93 ||

Her mercy which is beyond.
The mind and words of Our Lord Shiva,
Is forever victorious in the form of Aruna,
So as to save this world.
That spirit of mercy is in the form of,
Curves in her hairs,
In the form of natural sweetness in her smile.
In the form of pretty tenderness of a flower in her mind,
In the form of firmness of a ruby stone in her breasts,
In the form of thin seductiveness in her hips,
In the form of voluptuousness in her breasts and back.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:93 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)


Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment