Contact Us

Name

Email *

Message *

Wednesday 14 March 2018

Shivananda Lahari - Sloka: 36


தேகமாகிய தேவாலயத்திற்கு புண்யாஹவாசனம்| Purifying the body (Temple)


भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः
कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन् 
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

பக்தோ பக்தி குணாவ்ருதே முதம்ருதா பூர்ணே ப்ரஸன்னே மன:
கும்பே ஸாம்ப தவாங்க்ரி பல்லவ யுகம் ஸம்ஸ்த்தாப்ய ஸம்வித்பலம் |
ஸத்வம் மந்த்ரம் உத்ரயன் நிஜம் சரீராகார சுத்திம் வஹன்,
புண்யாஹம் ப்ரகடீ கரோமி ருசிரம் கல்யாண மாபாதயன் || 36 ||

பார்வதி தேவியுடன் கூடியிருப்பவரே! நான் புனிதமானதொரு புண்யாஹவாசன முறையை உலகிற்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது, பக்தி என்னும் நூலால் சுற்றப்பட்டதும், மகிழ்ச்சி என்னும் அம்ருதம் போன்ற நீர் நிறைந்ததும், பிரகாசமாக ஒளிவீசக் கூடியதுமான என் உள்ளம்  என்னும் குடத்தில் (கும்பத்தில்) உன் இரு திருவடிகளாகிய மாவிலைகளையும், ஞானமாகிய தேங்காயையும் வைத்து சத்துவ குணத்தை வளர்க்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து என் உடலாகிய வீட்டிற்குத் தூய்மையை உண்டாக்கி, மனம் நிறைந்த மங்களங்களை அடைந்தவனாகிறேன் என்பதே அந்தப் புண்யாஹவாசன முறையாகும்.
         
bhakto bhakti-guṇāvṛte mud-amṛtā-pūrṇe prasanne manaḥ
kumbhe sāmba tavānghri-pallava yugaṃ saṃsthāpya saṃvit-phalam |
sattvaṃ mantram-udīrayan-nija śarīrāgāra śuddhiṃ vahan
puṇyāhaṃ prakaṭī karomi ruciraṃ kalyāṇam-āpādayan || 36 ||

Oh Lord , who is with your consort, 
I who am the devotee, 
Having tied the thread of devotion, 
Filled with water of happiness, 
In the pot of my mind which is golden clear, 
Have kept the mango leaves of your feet, 
And the coconut of real knowledge, 
And chant the holy peaceful five lettered Mantra,
And am purifying this body which carries my soul, 
And am searching good things which are pleasant to the mind,
And thus performing this ceremony of purification.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment