भजगोविन्दं भजगोविन्दं
गोविन्दं भजमूढमते ।
सम्प्राप्ते सन्निहिते काले
नहि नहि रक्षति डुकृञ्करणे ॥ १॥
हे मोह से ग्रसित बुद्धि वाले मित्र, गोविंद को भजो, गोविन्द का नाम लो, गोविन्द से प्रेम करो क्योंकि मृत्यु के समय व्याकरण के नियम याद रखने से आपकी रक्षा नहीं हो सकती है.
bhajagovindaṁ bhajagovindaṁ
govindaṁ bhajamūḍhamate |
samprāpte sannihite kāle
nahi nahi rakśati ḍukṛñkaraṇe || 1 ||
Worship Govinda, worship Govinda, worship Govinda, Oh fool ! Rules of grammar will not save you at the time of your death.
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம்பஜ மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிஞ்கரணே || 1 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
விவேகமற்றவனே!
கோவிந்தனை வழிபடு! கோவிந்தனை வழிபடு! கோவிந்தனை வழிபடு! மரண காலம் நெருங்கிய பொழுது 'டுக்ரிஞ்கரணே' போன்ற வியாகரண தாது பாடம் உன்னை ஒருக்காலும் காப்பாற்றவே காப்பாற்றாது.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்
பரந்தாமன் மெய்ப்புகழை
பாடிடுக மூட மதியே!
பாடுவதில் தீர்ந்துவிடும்
பழிபாவ மத்தனையும்
பரந்தாமன் சொன்ன விதியே!
பாடுவதை விட்டுவிட்டு
பாணினி இலக்கணத்தை
பற்றுவதில் நன்மை வருமோ?
பாய்விரித்த வேளைதனில்
காலனவன் சந்நிதியில்
பாணினியம் காவல் தருமோ?
பாடிடுக பாடிடுக
பரந்தாமன் மெய்ப்புகழை
பாடிடுக மூட மதியே!
பாடுவதில் தீர்ந்துவிடும்
பழிபாவ மத்தனையும்
பரந்தாமன் சொன்ன விதியே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment