வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. வரதட்சணை தருவதும் வாங்குவதும் தவறு. அதனை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை என்று வலியுறுத்தி வந்தார் காஞ்சி மகாபெரியவர். தன் பெயரைத் திருமணப் பத்திரிகைகளில் போடுவோர் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். ஆனாலும் சிலர் மீறினர். அந்த சமயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் சுவாமிகளிடம் பேட்டிக்கு வந்தார். உங்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், திருமண பத்திரிகையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் அனுகிரகத்துடன் என்று போடுகிறார்கள். அவ்வாறு போடுபவர்களில் பலர் உங்கள் கட்டளையை மீறி வரதட்சணை வாங்குகிறார்களே? என்று அவர் கேட்டார்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு மகான் சொன்னார் என்னுடைய தபஸ் போதவில்லை போலிருக்கிறது என்று. ஆங்கிலேயருக்கு அது புரியவில்லை. அதை உணர்ந்த சுவாமிகளே தொடர்ந்து, தவம் அதிகம் செய்தவர்களின் வார்த்தைகளை எல்லோரும் கேட்பார்கள். அதனை யாராலும் மீற முடியாது. அந்த அளவுக்கு நான் இன்னும் தவம் செய்யவில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் என் பேச்சை அவர்கள் மீறமுடிகிறது என விளக்கினார். மற்றவர்களுடைய தவறுகளைக் கூட தன்னுடையதாகவே பாவித்த அவரது குணத்தை வியந்து, மகானை வணங்கி விடைபெற்றார், அந்தப் பத்திரிகையாளர்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment